ஞாயிறு, 6 நவம்பர், 2016

சரிசமானமே தாரக மந்திரம்!

-கே.பி.பத்மநாபன் சாத்திரங்கள் சாற்றியவை சண்டாள ருக்கும்
   சரித்திரமாய்ப் பயனுறவே வேண்டுமென அன்றே
கோத்திரங்கள் குலசாதி விலங்கினையே அறுக்க,
   குன்றேறிக் கூவியறைந் திட்டமுற்போக் காளர்;
ஆத்திரத்தால் சிலரழிக்க முயன்றுமவர் மாண்பு
   ஆயிரமாண் டானபின்னும், ஆத்திகரும் அந்த
நாத்திகரும் போற்றுவகை யானதின்று; கொண்ட
   நன்மனித சமத்துவமே யன்றிவேறிங் கேது?

குலம்சாதி தீட்டென்ற மூடத்தில் மூழ்கி,
   கொண்டவளே அடியாரைப் போற்றாத போழ்தில்
உலகத்து மாந்தரெல்லாம் ஒன்றேயென் றுரைத்து
   உதறிட்டார் தம்துணையை; மனிதத்தின் உயர்வு!
நிலம்கொண்ட சாதிமல அழுக்கெல்லாம் நீங்க
   நெடும்பயணம் செய்திட்ட அவதாரக் கோமான்!
நலம்கண்ட மூவரிலும் நடுநாய கம்தான்;
   நம்பியவர் நெறிமுறையோ சமநாய கம்தான்!


நன்றி: விஜயபாரதம்- ராமானுஜர் சிறப்பிதழ்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக