ஞாயிறு, 13 நவம்பர், 2016

ராமானுஜரின் மனிதநேயக் கொள்கைகள்-ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ .வே.. கிருஷ்ணமாச்சாரியார்


உலக ஆன்மிக சிந்தனையாளர்களின் இடையில் ராமானுஜருக்குச் சிறப்பானதொரு  இடமுண்டு.  அவரது ஆன்மிக அணுகுமுறை மற்றையோரிடமிருந்து வேறுபட்டதாகும். அவரது ஆன்மிகச் சிந்தனை அன்றாட வாழ்வியலோடும் சமுதாயச் சூழலோடும் பின்னிப் பிணைந்தது.  

ஆன்மிகத்தில் அவரது தொலைநோக்குப் பார்வை, முற்போக்கான சிந்தனை இவையெல்லாம் அவரை ஒரு ஆன்மிகவாதி என்பதைவிட மனித சமுதாயம் முழுவதுமே ஏற்றம் பெற உழைத்த ஒரு தன்னலமற்ற சமூகச் சிந்தனையாளராகவே நமக்கு அடையாளம் காட்டுகின்றன

சமூகத்தின் கடைநிலையில் இருக்கும் மனிதனும் ஆன்மிக ஏற்றம் பெற்றுய்ய வழிகாட்டியவர் அந்த மாமனிதர். மற்ற எந்த ஆன்மிகவாதிக்கும் இல்லாத இந்தப் பெருமையும் புகழும் ராமானுஜருக்கு மட்டுமே அமைந்துள்ளது.


ராமானுஜரின் ஸ்ரீபாஷ்யம்- ஒரு அறிவியல் பூர்வமான படைப்பு 

ராமானுஜர் ஒரு சிறந்த அறிவாளியும் அறிவியல் பூர்வமான சிந்தனை படைத்தவரும் ஆவார். அநேக ஆசார்யர்களின் அறிவு சார்ந்த விளக்கங்களைக் கேட்டு மகிழ்ந்த இவரால், தான் பெற்ற அறிவை ஒன்றுதிரட்டி நூல்கள் பலவற்றை இயற்ற முடிந்தது

இத்தகைய அறிவாற்றல் படைத்திருந்ததால், ஸ்ரீவைஷ்ணவத்திற்கு அறிவியல் பூர்வமான விளக்கத்தைத் தம்முடைய புகழ் பெற்ற ஸ்ரீபாஷ்யத்தில் இவரால் தர முடிந்தது. இவருடைய ஸித்தாந்தம்  ‘விசிஷ்டாத்வைதம்என்று வழங்கப்படுகிறது. இவர்  நாடெங்கும் பயணம் செய்து, இந்த ஸித்தாந்தத்தைப் பரப்பினார்.  

இவர் இந்தியா முழுவதும் கால்நடையாகவே சென்று, தம் கொள்கைகளை பரப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸித்தாந்தத்தை வளர்க்க,  இவர் 74 சிறப்புமிக்க மையங்களை (ஆசார்ய பீடங்களை) ஏற்படுத்தி வைத்தார். தன்னுடைய சீடர்களை இந்த மையங்களின் பொறுப்பாளர்களாக நியமித்தார்

இந்த மையங்களில், இவற்றின் தலைமை ஆசார்யர்கள் பஞ்சஸம்ஸ்காரம் செய்து கொள்வதின் அவசியத்தைப் போதித்து வந்தனர். மந்திரங்களையும் ஸித்தாந்தங்களையும் மக்களுக்குக் கற்பித்தனர். மேலும் ராமானுஜர் தன்னுடைய சிஷ்யர்களை, மந்திரங்களுக்கான பொருளையும் ஸ்ரீபாஷ்யத்தையும் வேதங்களையும் திவ்யப்பிரபந்தங்களையும் ஆழ்ந்து ஆராய்ந்து கற்று, அவற்றைப் பரவச் செய்யும்படி ஊக்குவித்தார்.  

அவருடைய இந்த முயற்சியின் பலனாக ஸ்ரீவைஷ்ணவ கோட்பாடுகள் நாடெங்கும் பரவியது. இந்தக் கோட்பாடுகள் வடகிழக்குப் பகுதிகளில் பரவியது மட்டுமல்லாமல், அடுத்து வந்த முகம்மதியர்கள் படையெடுப்பையும் எதிர்கொண்டது.

ராமானுஜரின் ஸ்ரீபாஷ்யம், விசிஷ்டாத்வைத  மதக்கோட்பாடுகளின் அடிப்படை விளக்கமாகும். இதில் பாதராயணரின் (வேத வியாஸரின்) பல்வேறு ஸூத்திரங்கள் அதில் விளக்கம் பெற்றுள்ளன

ராமானுஜர் இயற்றிய மற்ற க்ரந்தங்கள், நித்யம் எனப்படும் நித்ய திருவாராதனக்ரமத்தை விளக்கிடும் நூல், சரணாகதியை விளக்கும்சரணாகதிகத்யம்’ (இந்தக் கத்யமானதுத்வயமந்திரத்தின் விரிவாக அமைந்துள்ளது) அர்ச்சாமூர்த்தியின் பெருமையை விளக்கும் நூலானஸ்ரீரங்ககத்யம்’. ஸ்ரீவைகுண்டத்தின் பெருமையையும் அங்கு எம்பெருமானின் வைபவத்தையும் விளக்குவதான ஸ்ரீவைகுண்ட கத்யம்’. இந்த மூன்று கத்யங்களும், ‘கத்யத்ரயம்என்று வழங்கப்படுகிறது

வேதாந்ததீபம், ‘வேதாந்த ஸாரம்’, ‘வேதார்த்த ஸங்க்ரஹம், கீதைக்கு விரிவுரையானகீதா பாஷ்யம்ஆகியவை ராமானுஜர் இயற்றிய மற்ற நூல்கள்.  இவ்வாறாக ராமானுஜர் மனித உலகம் உய்ய நவரத்தினங்களாகிய ஒன்பது நூல்களை அருளிச் செய்துள்ளார்.

ராமானுஜருடைய ஆணைகள் 900 ஆண்டுகள் கடந்த பின்பும் ஸ்ரீரங்கம், திருமலை, மேல்கோட்டை, தொடக்கமான பல திருக்கோயில்களில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்தக் காரணத்தால், இந்த ஊர்களும் அவற்றின் சரித்திரமும், வருங்காலச் சந்ததியினர் எக்காலத்திலும் போற்றிப் பின்பற்றக் கூடிய உயிரோட்டமுள்ள நினைவுச் சின்னங்களாக இருந்து வருகின்றன

மரபு என்பது எந்த ஒரு நாகரிகத்தையும் நிலைநிறுத்தக் கூடிய ஒரு சக்தியாக விளங்குகிறது. ஏனெனில், இது இறந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைக்கக்கூடிய ஒரு இணைப்புப் பாலமாகும். ஒரு சமுதாயம் அடிப்படையாக எந்த மரபைக் கொண்டாடுகிறதோ, அதுவே அந்தச் சமுதாயத்தின் பண்பாட்டு அளவை நிர்ணயிக்கிறது.

பண்டைக்கால வரலாற்றை வடிவமைக்க உறுதியான ஆதாரமாக இருப்பவை, கல்வெட்டுகளே. பல நேரங்களில் கோயில் கல்வெட்டுகள் மட்டுமே, கிடைக்கக்கூடிய ஒரே தனிப்பட்ட ஆதாரமாக அமைகிறது. இதைப் போலவே, முற்காலத்துக் கட்டடக்கலை நினைவுச் சின்னங்களாக இப்பொழுது காணப்படும் கோயில்கள் ஆகியவை பண்டைய வரலாற்றை அறிய உதவுகின்றன.  கோயில் கல்வெட்டுகளைக் கொண்டும், வைணவ உரையாசிரியர்களின் உரை விளக்கங்களில் காணப்படும் சில குறிப்புகளைக் கொண்டும், ராமானுஜருடைய வாழ்க்கை வரலாற்றின் சில பகுதிகளையே நாம் அறிந்து கொள்ள முடியும்.

ராமானுஜர் தம் காரேய் கருணையினாலே ஆசார்ய நியமனத்தையும் மீறி நமக்கு நரகம் வந்தாலும் வரட்டும்; பலர் உய்வடைந்தால் போதும் என்னும் திருவுள்ளத்துடன் பலர்க்குத் திருமந்திரார்த்தத்தின் ஆழ்பொருளை விரித்துரைத்ததைக் கண்டு  ‘எம்பெருமானாரே!’ என்று ராமானுஜரை அணைத்துக்கொண்டுஎம்பெருமானார் தர்சனம்என்று எம்பெருமானார் திருநாமத்தாலே விசிஷ்டாத்வைத கோட்பாடுகள் விளங்கும்படி அருள்புரிந்து, அவருக்குத் தாமே சரம ச்லோகார்த்தத்தை உபதேசித்து, அதில் விருப்பம் கொண்டோர்க்கு உபதேசிக்கும்படி நியமித்தருளினார்.  

திருமாலையாண்டானை எம்பெருமானாருக்குத் திருவாய்மொழியின் விரிவுரையை  சொல்லும்படி நியமித்தவரும் இவரே

திருவரங்கத்து அமுதனார் தம்முடைய ராமானுஜ நூற்றந்தாதியில் கூறுவது யாதெனில்,

  எய்தற்கரியமறைகளை ஆயிரம் இன்தமிழால்
  செய்தற்கு உலகில்வரும் சடகோபனை சிந்தையுள்ளே
  பெய்தற்கிசையும் பெரியவர்சீரை உயிர்களெல்லாம்
  உய்தற்கு உதவும் இராமானுசன் எம் உறுதுணையே. (18) 

பல்வகையாலும் பெருகியிருக்கும் வேதங்களைப் போல் அல்லாமல் ஆயிரம் பாசுரங்களில் இவ்வுலகில் உள்ளோர் உய்யும்பொருட்டு திருவாய்மொழியை அருளிச் செய்த சடகோபர்தம் திருவுள்ளத்திலே   நிலை இல்லையெனில் வாழ்வோ, முயற்சிகளோ, மகிழ்ச்சியோ இல்லை. எனவே உயிர் காக்கும் உணவை அளிக்கும் பயிர்களை இப்பூமியில் வளர்ப்பது இயற்கையே; அதற்கு எந்த வழிகாட்டுதலோ, அறிவுரைகளோ அவசியம் இல்லை. வேண்டிய அளவு வழங்குவது என்பது இயற்கையின் விதி. அது கூடவோ குறையவோ இருக்காது

எம்பெருமான் திருமுன்பு பிரஸாதம் வழங்கப்படும்போது உயர்குலத்தோர், தாழ்குலத்தோர் என்ற வேறுபாட்டினைக் கொள்ளாமல் அனைவருக்கும் அது வழங்கப்படுகிறது. இது ராமானுஜர் நடைமுறைப்படுத்திய செயல்களில் ஒன்றாகும். இவையெல்லாம் அவர் உள்ளத்தில் கொண்ட சமுதாயச் சிந்தனைகள் மற்றும் மனித நேயத்தின் வெளிப்பாடு ஆகும்.

இவ்வுலகில் ராமானுஜர் தோன்றியவுடன் சாஸ்திர ஞானம் மிகுந்தவர்கள் பயன் பெற்றனர். ஞானத்தில் தெளிவும் ஒழுங்கும் உறுதிப்பாடும் நிலை பெற்றன. நம்மாழ்வாருடைய திருவடியைப் போற்றிய ராமானுஜர் புகழ் மங்கவில்லை; பொங்கிப் பெருகியது. ஆழ்வார்களுடைய பாசுரங்கள் வாயிலாக ராமானுஜர் பாற்கடலில் தோன்றிய தாமரைச் செல்வியாகிய திருமகள் தன் பிறப்பிடத்தைக் காட்டிலும் போக்கியமானதாகக் கருதி, அகலாமல் உறைகின்ற திருமார்பினை உடைய திருமாலின் பெருமைகளை உலகறியச் செய்தார்.

ராமானுஜர், ஆத்மாவிற்கும் உடலுக்கும் இருக்கக் கூடிய உறவினை மூன்று விதங்களாக விளக்கினார். அவை: தாங்குவது- தாங்கப்படுவது, நியமிப்பது- நியமிக்கப் படுவது, சொத்துக்கு உடையவன் (சேஷி)- சொத்து (சேஷன்). இதில், மூன்றாவது உறவுமுறையே குறிப்பிடத் தக்கது எனலாம்.  
அடிமை ஆண்டானுக்குச் செய்ய வேண்டிய பணிவிடையும் அவருடைய நம்பிக்கையைப் பெறவேண்டியதும் முக்கியம். இதேபோல அடிமையை ஆண்டான் பார்த்துக் கொள்ள வேண்டியதும் முக்கியம். ஒவ்வொரு வஸ்துவிலும் பரமாத்மாவே உறைகின்றார். அசித் (உயிரற்றது), சித் (உயிருள்ள ஜீவன்) மற்றும் ஈச்வரன் (இறைவன்) என்ற மூன்றும் உண்மைத் தத்துவங்கள் என்பது ராமானுஜரது கருத்தாம். ஜீவாத்மாக்களின் கட்டுப்பாட்டில் ஜடப் பொருள்கள் அடங்கி இருப்பதே உலக இயல்பு.

ஒரு ஜீவன் தங்கியுள்ள உடல் தற்காலிகமானது. ஆத்மாவுக்குத் தோற்றமும் முடிவும் இல்லை. ஜீவாத்மாக்கள்அனாதியான கர்மத்திற்கு உட்பட்டு, புதுப்புது உடல்களை ஏற்று மீண்டும் மீண்டும் உலகத்தில் தோன்றுகின்றன. ஆனால், இவ்வுலகத்தில் எந்த உடலில்  ஆத்மா கட்டுப் பட்டிருந்தாலும் பகவானுடைய ஆற்றலையும், கருணையையும் போற்றுவதே ஜீவாத்மாக்களின் குறிக்கோளாகும்

உலகிலுள்ள பொருள்களுடன் இறைவனை நினைத்துப் பார்ப்பது  விபரீதமாகத் தோன்றினாலும், மாபெரும் எல்லையற்ற மகா அண்டம் முழுவதுமே இறைவனுடைய சரீரம் என்று ராமானுஜர் வலியுறுத்துகிறார். இதுவே மனித சமுதாயம் உய்வதற்கு ராமானுஜர் எடுத்துரைத்த வழிகளாகும்.


 நன்றி: விஜயபாரதம்- ராமானுஜர் சிறப்பிதழ்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக