வியாழன், 10 நவம்பர், 2016

குலம் பாராது குணம் போற்றும் குணசீலர்-ஒப்பிலியப்பன்ஆன்மிக வாழ்க்கை வாழ்ந்த பகவத் ஸ்ரீராமானுஜர், தொண்டர்களை உருவாக்கவில்லை. பகவானிடம் பக்தி கொள்ளும்பாகவதர்களைஉருவாக்கினார்.

நமது தமிழ்நாட்டில் எத்தனையோ ஜாதிகள் - பிராமணர்கள், பஞ்சமர்கள், முதலியார், செட்டியார், வன்னியர், நாயுடு, கவுண்டர், தேவர் என்று பட்டியல் நீண்டுகொண்டே போகும்! இத்தனை ஜாதிகளிலும் வைணவர்கள் உண்டு. அவர்கள் சந்தித்துக் கொண்டால்அடியேன் ராமானுஜ தாஸன்என்று கை கூப்பி அறிமுகம் செய்து கொள்வதை இன்றும் நாம் பார்க்கலாம்

எதிரே நிற்பவர் ஒரு வைணவர் என்றால், அவர் எந்த ஜாதியாக இருந்தாலும், அவர் ராமானுஜ தாஸர்தான். இப்படி பக்திபூர்வமாக பகவத் பண்பினை வளர்த்தவர் ராமானுஜர்.நன்றி: விஜயபாரதம்- ராமானுஜர் சிறப்பிதழ்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக