செவ்வாய், 4 அக்டோபர், 2016

எடுத்த சபதம் முடித்தவர்!

-முத்துவிஜயன்


ஆளவந்தாரின் அழைப்பை பெரிய நம்பிகள் மூலம் கேள்வியுற்று காஞ்சிபுரத்திலிருந்து ஸ்ரீரங்கம் ஓடோடி வந்த ராமானுஜர், அவரது உயிர்பிரிந்த உடலைத்தான் பார்த்தார். ஆனால் அவ்வுடலின் மூன்று கைவிரல்கள் மட்டும் மடியாத நிலையில் இருந்தன. யாராலும் அதற்கான காரணம் சொல்ல இயலவில்லை. 

 உடனே ராமானுஜர் மூன்று பிரமாணங்கள் எடுத்துக் கொள்வதாகச் சொல்லி அப்பிரமாணங்களை ஒவ்வொன்றாகச் சொன்னதும், ஆளவந்தாரின்  மூன்று விரல்களும் ஒவ்வொன்றாக மடிந்தன. 

அந்த பிரமாணங்கள்:

  • பிரம்ம சூத்திரத்திற்கு விசிஷ்டாத்வைதத்தை நிலைநாட்டி ஒரு உரை எழுதுவேன்.
  • விஷ்ணுபுராணம் இயற்றிய பராசரர், பாகவதம் இயற்றிய வேதவியாசர் ஆகியோரின் பெயரை வைத்து அழியாத புகழுக்கு வழி கோலுவேன்.
  • வேதத்தை அழகுத்தமிழில் பாசுரங்களாய் ஈந்த நம்மாழ்வாரின் பெயர், உலகில் என்றென்றும் வாழும்படிச் செய்வேன்.
 -இம்மூன்றையும் ராமானுஜர் தன் காலத்தில் செய்து முடித்தார் என்பது வரலாறு. அவை:
  • பிரம்ம சூத்திரத்திற்கு ஸ்ரீபாஷ்யம் என்ற உரையை ராமானுஜர் எழுதி 1100-ஆம் ஆண்டு முடித்தார். 
  • பராசரர்,  வேதவியாசர் ஆகியோரின் பெயர்களை தன் சீடனாகிய கூரத்தாழ்வானின் குழந்தைகளுக்கு இட்டார். அவர்களில் விஷ்ணு ஸகஸ்ர நாமத்திற்கு எழுதிய விரிவான உரை இன்றும்  ‘பராசர பட்டரின் உரை’ என்று சிறந்து விளங்குகிறது. 
  • மூன்றாவதாக தன் சீடன் திருக்குருகைப்பிரான் பிள்ளான் மூலம் திருவாய்மொழிக்கு உரை படைத்து நம்மாழ்வாரின் பெயர் என்றும் ஓங்கி உலகளாவி இருக்கும்படிச் செய்தார்.
 -இவ்வாறாக, தனது கூருவுக்கு செய்துகொடுதத பிரமானத்தின்படி, எடுத்த சபதம் முடித்தார்,  அற்புதச் சீடர் ஸ்ரீ ராமானுஜர்..கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக