வியாழன், 20 அக்டோபர், 2016

தொண்டர்குலம்

-ஜி.ஆளவந்தார்


ஸ்ரீவைணவர்களுக்கு – பாகவதர்களுக்கு – ஒரு குலம் உண்டு. அதுதான் தொண்டர் குலம்! அவர்களுடைய தொண்டு சமுதாயத்திற்கு இன்றியமையாதது. 

ஒருவன் தன்னைப் புகழும் போது ஸ்ரீவைணவன் வெட்கி ஒதுங்கித் தனது குறைகளை நினைத்துப் பார்ப்பான். ஒருவன் தன்னை நிந்திக்கும்போது, சினந்து சீறாமல் ‘அடியேனுடைய குறைகளை நினைவூட்டியதற்கு நன்றி!’ என்று மகிழ்ச்சி கொள்வான். 

தொண்டு நெறியில் முனைந்துள்ள சமயத்திலும், தன்னைச் சிறிதும் விளம்பரப்படுத்திக்கொள்ள மாட்டான். எப்போதும் சுய விமர்சனம் செய்து கொள்வதில் கண்ணுங் கருத்துமாயிருப்பான். 


இத்தகைய தொண்டருக்கு – பாகவதருக்கு – இழைக்கப்படும் அபசாரம், பகவானுக்கு இழைக்கப்படும் அபசாரத்தைவிட மிகக் கொடிய குற்றமாகும். 

இத்தகைய தொண்டரின் – பாகவதரின் – ஜன்ம நிரூபணம் செய்ய முயலுவது – அவர் எந்த ஜாதியைச் சேர்ந்தவர் என்று ஆராய முற்படுவது – முதன்மையான அபசாரம் என்று ஸ்ரீவைணவ சமயம் – இராமானுஜ சித்தாந்தம் – ஐயந் திரிபுக்கு இடமின்றி வன்மையாகக் கண்டிக்கிறது.

குறிப்பு: 
 ஜி.ஆளவந்தார் எழுதிய  ‘புரட்சித் துறவி இராமானுஜர்’  புத்தகத்திலிருந்து...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக