வெள்ளி, 7 அக்டோபர், 2016

அண்ணலின் திருமேனி- 1

-ஆசிரியர் குழுவைணவப் புரட்சித் துறவி இராமானுஜரின் மூன்று திருமேனிகள் புகழ் பெற்றவை ஆகும். அவை:
  1. தமர் உகந்த திருமேனி (மேல்கோட்டை என்ற திருநாராயணபுரம், மைசூர்)
  2. தானுகந்த திருமேனி (ஸ்ரீபெரும்புதூர்)
  3. தானான திருமேனி (ஸ்ரீரங்கம்).
அவை பற்றி இங்கு காண்போம்:
1. தமர் உகந்த திருமேனி 
(மேல்கோட்டை என்ற திருநாராயணபுரம், மைசூர்)
 
 தமர் உகந்த திருமேனி முதல் திருமேனி (இராமானுஜர் சிலை) கர்னாடகா மாநிலத்தில், மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள மேல்கோட்டை என்ற திருநாராயணபுரத்தில் நிறுவப்பட்டது.

ராமானுஜர் இங்கு 12 ஆண்டுகள் தங்கி கைங்கர்யங்கள் செய்தார். இது இராமானுஜரின் அபிமானத் தலம் ஆகும். தாழ்த்தப்பட்டவர்களைக் (பஞ்சமர்களை) கோயிலுக்குள் அழைத்துச் சென்று புரட்சி செய்ததும் இத்திருத்தலத்தில்தான்.

இராமானுஜர் தன் 80-ஆவது வயதில் திருநாராயணபுரத்திலிருந்து ஸ்ரீரங்கம் செல்வதற்காக அங்கிருந்த சீடர்களிடம் விடைபெற முயன்றார். அவரது சீடர்கள் அவரைப் பிரிந்து வாழ வேண்டுமே எனத் தவித்தார்கள்.

அது கண்டு துயருற்ற இராமானுசர் ஒரு சிற்பியைக் கொண்டு தன் உருவத்தை சிலையாக வடித்தார். இந்தச் சிலை இராமானுசர் கைகூப்பி வணங்கி விடைபெறும் கோலத்தில் அமைந்துள்ளது.

இந்தச் சிலையில் தம் தெய்வீக சக்திகளைப் பாயச்செய்தார். பின்பு சக்தியூட்டிய சிலையை தன் சீடர்களிடம் ஒப்படைத்தார். விடைபெறும்போது ‘நான் உங்களுடனேயே தங்கி இருப்பதாக எண்ணி இந்தச் சிலையை கண்டு மகிழ்ந்து அமைதி பெறுங்கள்.’ என்று அவர்களை அமைதிப்படுத்தினார்.

இந்தச் சிலை  ‘தமர் உகந்த திருமேனி’ என்றழைக்கப்படுகிறது. இன்றும் மேல்கோட்டையில் இச்சிலை வழிபடப்படுகிறது.நன்றி: விக்கிபீடியா

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக