சனி, 29 அக்டோபர், 2016

ராமானுஜரின் ஞானபுத்திரன்

-எம்.என்.ஸ்ரீநிவாசன் ‘திருக்குறுகைப்பிரான் பிள்ளான்’ என்பார் ராமனுஜரின் மாமாவான பெரிய திருமலை நம்பியின் குமாரர் ஆவார். ராமானுஜருடைய ஞானபுத்திரனாக அனைவராலும் மதிக்கப்பட்டவர்.

ராமானுஜருக்கு நம்மாழ்வார் மீதான பிரதிபக்தியையும் ஆளவந்தாரின் திருவுள்ளப்படியும், குறுகைப்பிரான் பிள்ளானின் நம்மாழ்வார் மீதான மிகுந்த ஈடுபாட்டையும் குறித்தே பிள்ளான் என்ற பெயருடன் திருக்குறுகை என்ற நம்மாழ்வாரின் அவதாரத் தலத்தின் பெயரையும் சேர்த்து திருக்குறுகைப்பிரான் பிள்ளான் என்றே பெயரிட்டு அழைத்து வந்தார். இதற்குக் காரணமாக ஓர் நிகழ்ச்சியைக் குறிப்பிடலாம்.

ஒரு சமயம் ராமானுஜர் தமது மடத்தில் ஏகாந்தமாக ஓர் அறையில் தாளிட்டுக்கொண்டு நம்மாழ்வாரின் பாசுரம் ஒன்றைத் தம் மனதிலேயே நினைத்துக்கொண்டு அதற்கேற்ப அரையர் போல் அபிநயம் செய்து கொண்டிருந்ததைக் கதவின் சாவித்துவாரம் மூலம் கண்ட பிள்ளான், அந்தக் குறிப்பிட்ட பாசுரத்தை உரக்க கூறி, ராமானுஜரின் திருவுளம் பற்றி அறிய விரும்பினார். அதைக் கேட்ட மாத்திரத்தில் ராமானுஜர் உடனடியாக வெளியே வந்து பிள்ளானை மிகவும் பாராட்டி அவருக்கு நம்மாழ்வாரின் திருவாய்மொழி மீதான பற்றுதலையறிந்து அவரையே திருவாய் மொழிக்கு வியாக்கியானம் (விளக்கவுரை) அருளப் பொருத்தமானவர் என்று கருதி பிள்ளானுக்குக் கட்டளையிட்டார்.

மணிப்பிரவாள நடையில் அமைந்த கிரந்தம்

அவரும் அதன்படியே ‘ஆராயிரப்படி’ என்ற வியாக்கியானத்தை அருளிச் செய்தார். இதுவே முதன்முதலில் கிரந்த ரூபமாக அவதரித்த ஸ்ரீ கோசம் (நூல்) இதில் நாதமுனிகள், அளவந்தார், திருமலையாண்டான், திருவரங்கப் பெருமாள் அறையர், ராமானுஜர் ஆகியோருடைய கருத்துகளைக் கொண்டதும் முதன் முதலாக வைணவ சம்பிரதாய மொழியான மணிப்பிரவாள நடையில் அமைந்ததுமான கிரந்தமாகும்.

ஜைன மதத்தின் ஏகபோகமாக இருந்த மணிப்பிரவாள எழுத்தினை வைணவத்தில் புகுத்திய பெருமை திருக்குறுகைப் பிரான் பிள்ளானையே சாரும்.

இவர் நம்பெருமாள் சன்னிதியில் விசேஷ கைங்கர்யங்களைச் செய்து கொண்டும் உபய வேதாந்தியாக விளங்கியவர். ராமானுஜர் திருநாடலங்கரித்த போது அவருக்கு இறுதிக் கடன்களை செய்யும்படியான பாக்கியம் இவருக்குக் கிட்டியது.

திருவஹிந்திரபுரத்தில் அமைந்துள்ள னிவாசர் திருக்கோயிலில் திருக்குறுகைப்பிரான் பிள்ளான், ராமானுஜருடனும் கிடாம்பியாச்சானுடனும் இணைந்து திருச்சிலா ரூபமாகக் காட்சி அளிப்பதை இன்றும் தரிசிக்கலாம்.

நன்றி: தி இந்து -ஆனந்தஜோதி (20.10.2016)


வெள்ளி, 21 அக்டோபர், 2016

விசிஷ்டாத்துவைதம்- எளிய அறிமுகம்.

-ஜி.ஆளவந்தார் 


ஹிந்து தத்துவத்தில் மூன்று பிரிவுகள் உள்ளன. அவையாவன: துவைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம். 

வேதங்களின் மணிமுடி என்று கருதப்படும் உபநிடதங்களில் “உண்மைப் பொருள் ஒன்றே; இரண்டு அல்ல” என்று வற்புறுத்தும் வாக்கியங்கள் உள்ளன. 

இதை அடிப்படையாகக் கொண்டு “ஜீவாத்மாவும் பரமாத்மாவும் இரண்டல்ல ஒன்றே” என்கிறார்கள் அத்வைதிகள்.

 “ஜீவனும் பிரம்மமும் ஒன்றல்ல இரண்டே” என்பர் துவைதிகள். 

இந்தக் கொள்கைக்கும் உபநிடத அடிப்படை உண்டு. முரண்படுவது போலத் தோன்றும் இவ்விரண்டையும் சமரசப்படுத்திப் பொருள் காண்பதுதான் விசிஷ்டாத்துவைதம்.

குறிப்பு:
.ஜி.ஆளவந்தார் எழுதிய  ‘புரட்சித் துறவி இராமானுஜர்’  புத்தகத்திலிருந்து.


.

வியாழன், 20 அக்டோபர், 2016

தொண்டர்குலம்

-ஜி.ஆளவந்தார்


ஸ்ரீவைணவர்களுக்கு – பாகவதர்களுக்கு – ஒரு குலம் உண்டு. அதுதான் தொண்டர் குலம்! அவர்களுடைய தொண்டு சமுதாயத்திற்கு இன்றியமையாதது. 

ஒருவன் தன்னைப் புகழும் போது ஸ்ரீவைணவன் வெட்கி ஒதுங்கித் தனது குறைகளை நினைத்துப் பார்ப்பான். ஒருவன் தன்னை நிந்திக்கும்போது, சினந்து சீறாமல் ‘அடியேனுடைய குறைகளை நினைவூட்டியதற்கு நன்றி!’ என்று மகிழ்ச்சி கொள்வான். 

தொண்டு நெறியில் முனைந்துள்ள சமயத்திலும், தன்னைச் சிறிதும் விளம்பரப்படுத்திக்கொள்ள மாட்டான். எப்போதும் சுய விமர்சனம் செய்து கொள்வதில் கண்ணுங் கருத்துமாயிருப்பான். 

திங்கள், 10 அக்டோபர், 2016

தேடி வந்த குரு

-என்.ராஜேஸ்வரி
 காஞ்சி வரதராஜப் பெருமாள், பெரியநம்பிகளை ஆச்சாரியராகக் கொள்ளும்படி ஸ்ரீராமானுஜரிடம் கூறினார் என்பது ஐதீகம். இதனையடுத்து ராமானுஜர் பெரியநம்பிகளைத் தேடி ஸ்ரீரங்கம் சென்றுகொண்டிருந்தார். அதே சமயத்தில் ராமானுஜரைத் தேடி காஞ்சிபுரத்திற்கு வந்துகொண்டிருந்தார் பெரிய நம்பிகள். இருவரும், வழியில் இருந்த மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயிலில் உள்ள கருணாகரப் பெருமாள் சன்னிதியில் சந்தித்தனர். தனக்கு உடனடியாக பஞ்ச சம்ஸ்காரம் செய்தருளும்படி, பெரியநம்பியிடம் வேண்டினார் ராமானுஜர்.

ஞாயிறு, 9 அக்டோபர், 2016

அண்ணலின் திருமேனி- 3

-ஆசிரியர் குழு


வைணவப் புரட்சித் துறவி இராமானுஜரின் மூன்று திருமேனிகள் புகழ் பெற்றவை ஆகும். அவை:

  1. தமர் உகந்த திருமேனி (மேல்கோட்டை என்ற திருநாராயணபுரம், மைசூர்)
  2. தானுகந்த திருமேனி (ஸ்ரீபெரும்புதூர்)
  3. தானான திருமேனி (ஸ்ரீரங்கம்).
அவை பற்றி இங்கு காண்போம்:

சனி, 8 அக்டோபர், 2016

அண்ணலின் திருமேனி- 2

-ஆசிரியர் குழுவைணவப் புரட்சித் துறவி இராமானுஜரின் மூன்று திருமேனிகள் புகழ் பெற்றவை ஆகும். அவை:

  1. தமர் உகந்த திருமேனி (மேல்கோட்டை என்ற திருநாராயணபுரம், மைசூர்)
  2. தானுகந்த திருமேனி (ஸ்ரீபெரும்புதூர்)
  3. தானான திருமேனி (ஸ்ரீரங்கம்).
அவை பற்றி இங்கு காண்போம்:

வெள்ளி, 7 அக்டோபர், 2016

அண்ணலின் திருமேனி- 1

-ஆசிரியர் குழுவைணவப் புரட்சித் துறவி இராமானுஜரின் மூன்று திருமேனிகள் புகழ் பெற்றவை ஆகும். அவை:
  1. தமர் உகந்த திருமேனி (மேல்கோட்டை என்ற திருநாராயணபுரம், மைசூர்)
  2. தானுகந்த திருமேனி (ஸ்ரீபெரும்புதூர்)
  3. தானான திருமேனி (ஸ்ரீரங்கம்).
அவை பற்றி இங்கு காண்போம்:

வியாழன், 6 அக்டோபர், 2016

குருவை மிஞ்சிய சீடர்

-முனைவர் இரா.வ.கமலக்கண்ணன்
ஸ்ரீ ராமானுஜர் திருஅவதாரம் செய்து வளர்ந்துவருகையில் வேதாந்தம் பயில, காஞ்சிபுரத்தை அடுத்த திருப்புட்குழி என்னும் ஊரிலிருந்த யாதவப் பிரகாசர் என்னும் அத்வைத வேதாந்தியிடம் சென்றார். அவருடன் அவருடைய சிறிய தாயார் மகனான கோவிந்தன் என்பவரும் உடன் பயிலச் சென்றார்.

அத்வைதம் என்றால் இரண்டற்றது என்று பொருள். அதாவது பிரம்மம் (பரம்பொருள்) ஒன்றே உண்மை; மற்றவை பொய்த் தோற்றம் என்ற கொள்கையுடையது அத்வைதம். வேதத்தில் பரம்பொருள் வேறு, மற்றவையான அறிவுடைய, அறிவற்ற பொருட்கள் வெவ்வேறு எனப் பொருள்படும் வாக்கியங்களும், அப்பரம்பொருள் எல்லாப் பொருட்களையும் தன்னுள் கொண்டுள்ளமையால் பரம்பொருள் ஒன்றே எனப் பொருள்படும் வாக்கியங்களும் உள்ளன. இவற்றைப் பேதச் சுருதி, அபேதச் சுருதி என்றும் கூறுவர். இவ்விரண்டில் பிரிவுபடாத நிலையை அறிவிக்கும் வாக்கியங்களை (அபேத வாக்கியங்கள்) மட்டும் முடிந்த முடிவாகக் கொண்டு அதற்கு ஏற்ப மற்றப் பிரிவு படக் கூறுகிற வாக்கியங்களுக்கும் பொருளைக் கூறுவது அத்வைத மரபு.

புதன், 5 அக்டோபர், 2016

ராமானுஜனுக்கு தாயின் தாலாட்டு

-கவிஞர் வாலி


எண் - 7
ராமானுஜனா? ராஜகுமாரனா? 

‘மலடு’ எனும்
மூன்றெழுத்துச் சொல்லையே –

உள்ளீடற்ற
ஒரு –
மலட்டுச் சொல்லாக
மாற்றியவன்;

தன்னை
தாயார் ஸ்தானத்திற்கு – ஓர்
ஏணிபோல வந்து
ஏற்றியவன்!

இதற்கு மேலும் –
இராமானுஜன் மேல்…

பித்தேறிக் கிடக்கப்
பெற்றவளுக் கென்ன வேண்டும்?

தன்னிலிருந்து
தவமிருந்து
தானே பிரித்தெடுத்த தன்னை;

தங்க வயல்
தோண்டி எடுக்காது –
அங்க வயல்
அகழ்ந்து எடுத்த பொன்னை;

தரையில் விடுவாளா?
தலைமேல் தாங்கினாள் யாண்டும்!

தூளியில் விட்டது கொஞ்சம்;
தொட்டிலில் விட்டது கொஞ்சம்;
அந்தக் கொஞ்சத்திற்கே – அவளை
அனலில் விட்டது நெஞ்சம்!

செவ்வாய், 4 அக்டோபர், 2016

எடுத்த சபதம் முடித்தவர்!

-முத்துவிஜயன்


ஆளவந்தாரின் அழைப்பை பெரிய நம்பிகள் மூலம் கேள்வியுற்று காஞ்சிபுரத்திலிருந்து ஸ்ரீரங்கம் ஓடோடி வந்த ராமானுஜர், அவரது உயிர்பிரிந்த உடலைத்தான் பார்த்தார். ஆனால் அவ்வுடலின் மூன்று கைவிரல்கள் மட்டும் மடியாத நிலையில் இருந்தன. யாராலும் அதற்கான காரணம் சொல்ல இயலவில்லை. 

திங்கள், 3 அக்டோபர், 2016

உண்மையான சமூக சீர்திருத்தவாதி.

-சுவாமி சைதன்யானந்தர்


பாரதத் திருநாட்டில் அவதாரங்களும், மகான்களும் என்றும் வாழ்கின்றனர். நேற்றும், இன்றும், நாளையும் இது தொடரும். ஏனெனில் இது புண்ணிய பூமி, கர்ம பூமி.

மனிதன் தன் வாழ்வின் லட்சியமாம் முக்தி பெற பிறவி எடுக்க வேண்டிய புனித பூமி பாரதம். எங்கெங்கு தேவையோ அங்கெல்லாம் அவதாரங்களோ, மகான்களோ தோன்றி மக்களை நெறிப்படுத்துவர், வழிநடத்துவர்.

அத்தகு மரபில் தோன்றிய மகானே ஸ்ரீராமானுஜர்.

தற்பொழுது அரசியல்வாதிகளும், அறிவு ஜீவிகளும் வெறும் விளம்பரத்திற்காக சில பிரச்சினைகளைக் கூறி கூக்குரலிடுகின்றனர். ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமயப் புரட்சியை தனி ஒருவராகச் சாதித்த பெருமை ஸ்ரீ ராமானுஜருக்கு உண்டு.

ஞாயிறு, 2 அக்டோபர், 2016

அம்பேத்கரின் புகழ்மாலை

-ஜி.ஆளவந்தார்சித் (ஆத்மா) அசித் (சரீரம்) ஆகிய இரண்டையும் உடலாகக் கொண்டு, அவற்றுக்குள் உயிரைப் போன்று மறைந்து, அந்தர்யாமியாய், எங்கும் பரந்துள்ளவன் நாராயணன் என்று பறை சாற்றுகிறது இராமானுஜ தரிசனம். 

ஜாதி வேறுபாடு சனாதன தர்மத்தின் – வைதிக மதத்தின் – சாபக்கேடு என்கிறது ஸ்ரீவைஷ்ணவம். பிறப்பினால் உயர்வு தாழ்வு என்பது, பூர்வ ஜன்மகர்ம பலனினால் ஏற்படுகிறது என்று கூறுவது மிகப் பெரிய கொடுமை. 

சனி, 1 அக்டோபர், 2016

மோர்க்காரிக்கும் கருணை காட்டிய மகான்

-பூபதி ஸ்ரீனிவாசன்திருப்பதியில் அடிவாரத்தில், சீடர்கள் எழுப்பும் சந்தேகங்களுக்கு, தகுந்த விளக்கங்களை அளித்துக் கொண்டிருந்தார் ஸ்ரீராமானுஜர். அப்போது ‘மோரு… மோரு…’ என்று ஒரு பெண்மணியின் குரல் கேட்டது.

தலையில் மோர்ப்பானை சுமந்து, இடையர் குலப் பெண்மணி ஒருத்தி தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தாள். சீடர்களுக்கு மோர் சாப்பிட வேண்டும் என்று தோன்றியது. ஆனால், குருநாதர் பாடம் நடத்திக் கொண்டிருக்கிற இந்த வேளையில் மோர்க்காரியைக் கூப்பிட்டால், பாடத்தின் மேல் கவனம் இல்லாதது போல் ஆகிவிடும் என்பதால், மோர் ஆசையைத் துறந்து, பாடத்தில் கருத்தாக இருந்தார்கள். ஆனாலும், அன்றைக்கு மோர் குடித்தே ஆக வேண்டும் என்பது எழுதப்பட்டிருந்த ஒன்று போலும்.