ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

நேற்றும் இன்றும் என்றும் வாழும் ஸ்ரீ ராமானுஜர்

-காந்தாமணி நாராயணன்

யாதவப்பிரகாசர் கலைகளுக்குப் பெயர் போன காஞ்சி மாநகரின் சிறந்த அத்வைதவாதி. காஞ்சி மன்னன் அவருக்குத் தேவையான அத்தனை வசதிகளையும் செய்து கொடுத்தான். இவரது சீடன் தான் ராமானுஜர்.  

அரச மாளிகை ஒரு பல்கலைக்கழகம் போல் காட்சி அளித்தது. பூரண சந்திரனுக்கும் குறைபாடு இருப்பது போல யாதவப்பிரகாசருக்கும் சிறிது களங்கம் வந்தது. அவரது மனதில் விகல்பம் இருந்து வந்தது. ராமானுஜரின் அபரிமிதத் திறமையால் பொறாமை கூட வந்ததுபகவானின் சிவந்த கண்களுக்கு யாதவப்பிரகாசர் தவறான விளக்கம் கொடுத்தார். அதற்கு ராமானுஜர் சரியான முறையில் விளக்கம் கொடுத்தார். இது யாதவப்பிரகாசருக்குத் தலைகுனிவை ஏற்படுத்தியதுராமானுஜர் அதற்காக மன்னிப்பு கேட்டும் சமாதானம் அடையவில்லை.


ஒரு முறை மன்னனின் மகளுக்கு பிசாசு பிடித்துக் கொண்டது. யாதவப்பிரகாசரால் மன்னரின் மகளைக் குணப்படுத்த முடியவில்லைஆனால் ராமானுஜர் தனது ப்ரம்ம தேஜஸ் மூலம் அதை நீக்கினார். அரசன் மகளிடமிருந்து பேய் விலகியதுஅரசன் மிகுந்த மகிழ்ச்சியடைந்து ராமானுஜரைப் பாராட்டினார்உண்மையில் சீடனின் மகத்துவத்தைக் கண்டு யாதவப்பிரகாசர் பெருமை கொள்ள வேண்டும்மாறாக பொறாமை தான் வந்தது. இதுவே ராமானுஜரது எதிர்காலத் திட்டத்திற்கு அஸ்திவாரமாக அமைந்தது

நீண்ட தீர்த்த யாத்திரைக்கு ஏற்பாடு செய்தார் யாதவப்பிரகாசர்அங்கேயே ராமானுஜரை முடித்து விட வேண்டும் என்று முடிவு செய்தார்ராமானுஜருடன் அவரது தம்பி கோவிந்தரும் கிளம்பினார்போகும் வழியிலேயே  யாதவப்பிரகாசரின் சதித்திட்டம் தெரிந்ததுநிலைமையைப் புரிந்துகொண்டு கோவிந்தன் தனது அண்ணனை எச்சரித்தான். பிறகு பயணத்தை முன்பே தொடர்ந்த ராமனுஜர் அடர்ந்த காட்டில் சிக்கிக் கொண்டார்அங்கு வேடுவத்  தம்பதியினரின் தொடர்பு ஏற்பட்டது. திடீரென்று அந்த வேடுவப் பெண்ணிற்கு தாகம் ஏற்பட்டதுராமானுஜர் அந்தப் பெண்ணிற்கு தண்ணீர் எடுக்க வெளியே சென்றார். தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்தபோது அங்கு வேடர் தம்பதிகளைக் காணவில்லைஅங்கும் இங்கும் அலைந்து தேடிப் பார்த்தார்அலைந்து அலைந்து ராமானுஜருக்கு ஓரே சோர்வுஇருள் நீங்கி கதிரவனின் கருணையால் சுற்றிலும் ஒளி. சுற்றுமுற்றும் பார்த்தால் ராமானுஜருக்கு ஒரே ஆச்சரியம். ஏனென்றால்  அவர் இருப்பது காஞ்சி நகரம். வேடுவத் தம்பதிகளாக அவருக்கு தரிசனம் அளித்தது  வரதராஜப் பெருமாளும் பெருந்தேவித் தாயாரும்! விந்திய மலையில் இருந்த ராமானுஜர் ஒரே இரவில் காஞ்சி வந்தார் என்றால் இது இறைவனின் கருணையைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்

காஞ்சி வரதராஜப் பெருமாள் தன் உள்ளக்கிடக்கையை திருக்கச்சி நம்பியிடம் கொட்டித் தீர்ப்பான்இதை அறிந்த ராமானுஜர் திருக்கச்சி நம்பியையே தனது குருவாக ஏற்றுக் கொண்டார்தீர்த்த யாத்திரை முடித்துத் திரும்பி வந்த யாதவப் பிரகாசருக்கு ராமானுஜரைப் பார்த்ததும் ஆச்சரியம். ராமானுஜரோ ஏதும் அறியாதது போல் பழகினார்இதுதான் பெரிய மனிதர்களின் பெருந்தன்மை.

 ராமானுஜரை ஸ்ரீரங்கத்திற்கு வர வழைத்ததும் ரங்கன் தான்அந்த வைணவத்திற்குப் பேராபத்து வந்தபோது ஸ்ரீ வேதாந்த தேசிகன்  எனும் ஆசார்யாரைத் தேர்ந்தெடுத்ததும் அதே ரங்கன்தான்ராமானுஜர், வேதாந்த தேசிகர் இருவரும் வைணவ வரலாற்றில் பொன் எழுத்தில் பொறிக்கப்பட வேண்டியவர்கள்

 தனது மனைவி மூலம் சன்யாச வாழ்விற்கு வந்தவர், ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண்ணினால் அகக்கண் திறந்தவர், ஆண்டாள் ரங்கநாதருக்குச் செய்ய நேர்ந்த வேண்டுதலை சகோதரன் என்ற முறையில் நேர்த்தியைச் செய்து வாழ்ந்தவர் ராமானுஜர்.  இப்படிப் பல அருஞ்செயல்களைச் செய்து ஆயிரமாவது ஆண்டில் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் ஆச்சார்யர் ராமானுஜர்!


நன்றி: விஜயபாரதம் - ஸ்ரீ ராமானுஜர் 1000 சிறப்பிதழ்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக