வியாழன், 15 செப்டம்பர், 2016

வரதராஜரின் ஆறு வார்த்தைகள்


-ஆசிரியர் குழு




ஸ்ரீ ராமானுஜர் உலக வாழ்க்கையில் பற்றற்று இருந்தார். அவரது தாயாரின் மறைவு, அவரை வெகுவாகப் பாதித்தது. திருக்கச்சி நம்பிகளுடன் பழகுவது, அவரது மனதிற்கு ஓரளவு ஆறுதலைத் தந்தது. அவருடனே வெகுநேரம் செலவிட்டார்.

திருக்கச்சி நம்பிகளிடம் தன்னைச் சீடனாக ஏற்றுக் கொள்ளுமாறு தரையில் வீழ்ந்து வணங்கி, மிகவும் இறைஞ்சிக் கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கையை மறுத்த திருக்கச்சி நம்பிகள்,  “நாராயணன் ஒரு நல்ல ஆசார்யனை (குருவை) உன்னிடம் அனுப்பி வைப்பார்” என்று கூறினார்.


திருமலைக்குச் சென்ற நம்பிகள் ஆறு மாதங்கள் கழித்துத் திரும்பி வந்தார். நம்பிகளிடம் ஸ்ரீ ராமானுஜர் தன் சந்தேகங்களைக் கூறி, காஞ்சி ஸ்ரீ வரதராஜரிடம் கேட்டு, அந்த ஐயங்களைத் தீர்க்கும்படி கேட்டுக் கொண்டார்.

அதுபற்றி பரமனிடம் விண்ணப்பித்த திருக்கச்சி நம்பிகள் ஸ்ரீ வரதராஜரின் வாக்காக இதைக் கூறினார்:


1. திருமாலே பரம்பொருள் (பரதத்துவம் நாமே).

.2. ஜீவனுக்கும் இறைவனுக்கும் வேறுபாடு என்பது உறுதியான சித்தாந்தம் (பேதமே தர்சனம்).

.3. சரணாகதி என்னும் பிரபத்தியே சிறந்த முக்தி நெறி.

.4. அந்திம ஸ்மிருதி கட்டாயமில்லை (மரண காலத்தில் உள்ளத்தை இறைவனிடம் ஒருமைப்படுத்தல் கூட அவசியமில்லை).

.5. சரீரத்தை விடும்போது (இப்பிறவியின் முடிவில்) என் பக்தர்களுக்கு முக்தி நிச்சயம்.

.6. பெரியநம்பியைக் குருவாக ஏற்றுக் கொள்ளவும்.




நன்றி: விஜயபாரதம் - ராமானுஜர் 1000 சிறப்பிதழ்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக