ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

முக்கோல் முனிவர் வாழ்வில்- காலப்பதிவு

-ஆசிரியர் குழு
ஸ்ரீ ராமானுஜர் வாழ்வில் சில முக்கிய பதிவுகள்:

 • அவதாரம்: கி.பி. 04.04.1017 கலியுகம் 4119, சாலிவாகன, சக 939,     பிங்கள ஆண்டு, சித்திரை மாதம், 13ம் நாள்வியாழக்கிழமை, வளர்பிறை, பஞ்சமி திதி, திருவாதிரை நட்சத்திரம், கடக லக்கனம், ஸ்ரீபெரும்புதூரில் அவதாரம்.
 • தந்தையார்,  ஆசூரி கேசவ சோமயாஜி,  தாயார்காந்திமதியம்மை (பூமிப்பிராட்டி)

 • திருப்பெயர்:     ஸ்ரீ ராமானுஜர்

 • கோத்திரம்ஹரித கோத்ரம், வடமாள், யஜுர் வேதம், ஆஸ்வலாயன சூத்ரம்.

 • உபநயனம்: கி.பி. 1025 - 26.

 • தந்தையாரிடம் கல்வி: 15 வயது வரை.

 • திருமணம், துணைவியார்கி.பி. 1033, தஞ்சமாம்பாள் (ரக்க்ஷகாம்பாள்)

 • காஞ்சிபுரத்துக்குக் குடிவருதல்:    கி.பி. 1034 - 1035.

 • துறவறம் மேற்கொள்ளல்:   கி.பி.1047. வயது 30.

 • ஸ்ரீரங்கம் அடைதல்:   வயது 31-32.
 • திருக்கோட்டியூர் நம்பிகள் திருவடி சம்பந்தம்கி.பி. 1049 (ஏறக்குறைய).
 • ஸ்ரீரங்கம் நிர்வாகம் மேற்கொள்ளல்:  கி.பி. 1050. வயது 33.
 • திருமலை திருப்பதியில் அனந்தாழ்வான் மலர்த் தோட்ட வைபவம்:   கி.பி. 1051. வயது 34.

 • ஸ்ரீ பாஷ்யம் அருளல்: கி.பி. 1051 - 1055. வயது 34-38.

 • திருமலை திருப்பதியில் ஸ்ரீ வேங்கடாசலபதியின் திருக்கரங்களில் சங்கு சக்கரங்கள் வந்தடைந்த  வைபவம்கி.பி. 1057. வயது 40.

 • திருமலையிலும் திருப்பதியிலும் வழிபாட்டை ஒழுங்கு அமைத்தல்: கி.பி. 1057.

 • ஸ்ரீரங்கம் கோயில், சீர்திருத்தங்கள்கி.பி. 1058 முதல் 1090 வரை. வயது 41 முதல் 72 வரை.

 • திக்விஜயம்கி.பி. 1089 முதல் 1095 வரை. வயது 72 முதல் 79 வரை.

 • ஸ்ரீ கள்ளழகர் திருக்கோயிலில் மடம் நிறுவுதல்: கி.பி. 1091. வயது 74.

 • திருக்குறுக்குடியில் ஸ்ரீ ராமானுஜர் மடம் நிறுவுதல்: கி.பி. 1093. வயது 76.
 • ஸ்ரீகூர்ம க்ஷேத்திரம் ஸ்ரீ கூர்மநாதப் பெருமாள் தரிசனம்கி.பி. 1094 - 1095. வயது 77

 • திருநாராயணபுரம் (மேலக்கோட்டைதரிசனம்கி.பி. 1097 - 1098. வயது 79.

 • ஜைனர்கள் வைணவராகியதுகி.பி. 1101.

 • டில்லி பாதுஷாவின் மகளிடம் இருந்த சம்பத்குமார செல்லப் பெருமாள் விக்கிரகத்தை ராமானுஜர் பெற்றுக் கொண்டு வந்தது: 1099 - 1101. வயது 83 - 84.

 • திருநாராயணபுரம் வாழ்க்கைத் தொடர்பு: கி.பி. 1097 - கி.பி. 1110 (12 ஆண்டுகள்) 

 • ஸ்ரீரங்கம் கோயில் நிலைமை பற்றிவைணவர் ஒருவர் உடையவரிடம் கூறுதல்கி.பி. 1111 - 1112. வயது 93 - 94.

 • தமர் உகந்த மேனி திருநாராயணபுரம்திருநாராயணபுரம் கி.பி. 1111 - 1112.

 • தாமுகந்த திருமேனிஸ்ரீபெரும்புதூர்.

 • தானான திருமேனி:   திருவரங்கம் 1137. 

 •   ஸ்ரீராமானுஜர் பரமபதம் அடைதல்: கி.பி. 22-1-1137.நன்றி: விஜயபாரதம் ராமானுஜர் 1000 சிறப்பிதழ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக