ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

இனிமை - எளிமை - இனிமை- பகவத் ஸ்ரீ ராமானுஜர் -ஒப்பிலியப்பன்பகவத் ஸ்ரீ ராமானுஜர் அவதரித்து ஆயிரம் ஆண்டுகள் நிறைவடையப் போகிறது.  ஓர் அவதார புருஷனின் நினைவை நாம் அனைவருமே போற்றுகிறோம் என்றால் அதற்கு காரணம் என்ன? அவர் ஓர் ஆன்மிகத் துறவி என்பதாலா? அப்படியென்றால் அவரது கொள்கையில் ஈடுபாடு கொண்டவர்கள் மட்டுமே அவரைப் போற்றி கொண்டாடுவர்.

அவர் மதத்தில் புரட்சி செய்த மகான் என்று ஒரு சில ஆன்மிகத்தில் நம்பிக்கையற்ற அரசியல் தலைவர்கள் சொல்கிறார்களே இதுதான் காரணமா? அப்படியென்றால்  வைதீக வைணவர்கள், அவரை தங்கள் ஆச்சார்யனாக கொண்டாட மாட்டார்களே..! வடமொழியான சம்ஸ்கிருதத்தில்சௌசீல்யம்சௌலப்யம்ஔதார்யம் போன்ற வார்த்தைகளுக்கு அவர் ஓர் இலக்கணமாக இருந்தார்.

சௌசீல்யம்: அனைவரிடமும் எந்தவித வேற்றுமையும் பாராட்டாது, அவர்களிடம் மிகவும் சகஜமாகப் பழகுவதுதான் சௌசீல்யம். ஸ்ரீ ராமபிரானைசௌசீல்ய ஸாகரன் என்பார்கள். எளிமையாக சகஜமாக பழகுவதில் கடல் போன்றவன்... ஸ்ரீராமனுஜர் அப்படித்தான் இருந்தார்.

லௌலப்யம்: இதற்கு எளிமை என்று அர்த்தம். அனைத்தையும் துறந்து காஷாயத் துறவி. எங்கும் அவர் நடந்தே சென்றார். எளிமையில் திருவுருவம்தான் எம்பெருமானார்.

சௌதார்யம்: இது வள்ளல் தன்மையைக் குறிக்கும் வடமொழிச் சொல். காஷாயம் தரித்த ஒரு துறவி, அப்படியென பெரிதாக வாரி வழங்கியிருக்க முடியும். ‘அஷ்டாக்ஷர மந்திரத்தை திருக்கோட்டியூர் நம்பியிடம் உபதேசம் பெற, பதினெட்டு முறை நடையாய் நடந்து, ஒரு வழியாக அம் மந்திரத்தை உபதேசம் செய்விக்கப் பெற்றார். ரகசியம் காக்கப்பட வேண்டிய திருமந்திரம் அது. இம்மந்திரோபதேசம் பெற்றவனுக்கு மோட்சம் நிச்சயம். இந்நிலையில், இதனை அனைவரும் அறிந்து மோட்சம் அடைய, குருவின் ஆணையையும் மீறி, அனைவரும் உய்ய, அதனை உபதேசித்த ஜெகதாசாரியர் ஆயிற்றே அவர்? இதனால்தான் ஸ்ரீ ராமானுஜர், எம்பெருமானார் என்று போற்றப்பட்டார். இந்த வள்ளல் தன்மைக்கு ஈடு இணை ஏது?


நன்றி:  
விஜயபாரதம் - ஸ்ரீ ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டுவிழா சிறப்பிதழ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக