வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

காரேய் கருணை இராமாநுஜா! - வேதா டி.ஸ்ரீதரன்

-என்.டி.என்.பிரபு


 

 

 

 

 

 

.

 

.

 

 

 

 .

காரேய் கருணை இராமாநுஜா!

. 

-வேதா டி. ஸ்ரீதரன்

 வெளியீடு:  வேத ப்ரகாசனம்,  சென்ன
 


வேதா டி. ஸ்ரீதரன் அவர்கள் ‘காரேய் கருணை இராமாநுஜா!’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.  ‘ஏரியல் வியூ’ என்று சொல்வார்களே அப்படி ஒட்டுமொத்தமாகப் பார்த்து, ஒரு பரந்துபட்ட பார்வையுடன் ராமாநுஜரை அணுகியுள்ளார்; பல இடங்களில் நுணுகியும் பார்க்கிறார்.

இராமாநுஜர் குறித்த பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் அலசி ஆராய்ந்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ராமாநுஜரை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதே இப்புத்தகத்தின் மையக் கரு.


புத்தகத்தில், இந்தியாவில் நிலவும் பல்வேறு சம்பிரதாயங்கள் ஏன்? ஆசாரியர்கள், சிஷ்யன் – சில தகவல்கள், ஸ்ரீவைஷ்ணவம் குறித்த அறிமுகம், ஸ்ரீ ராமாநுஜரின் வாழ்க்கைச் சுருக்கம், ராமாநுஜர் வாழ்க்கை – சில கேள்விகள் ராமாநுஜர் ஆற்றிய பணிகள், இந்தியா முழுவதும் பக்தி எழுச்சி, ஸ்ரீபாஷ்யம் எல்லோருக்குமான புத்தகம் அல்ல, ஆசார்யாளும் உடையவரும், நம்மவர் யார், அயலார் யார் என்ற தலைப்புகளில் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. பல பெட்டி செய்திகளும் அறிய புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளது.

புத்தகத்தில் ஓரிடத்தில் அடைப்புக் குறிக்குள் குறிப்பிட்டுள்ள செய்தியானது,
ராமாநுஜர் வாழ்ந்த காலத்தின் சமுதாயச் சூழல் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அந்தக் காலத்தில் இந்தியாவில் பல்வேறு ஜாதிப்பிரிவுகள் தோன்றி இருந்தன. ஜாதிகளுக்கிடையே ஏற்றத்தாழ்வுகள் அதிகம் காணப்பட்டன. சமயப் பூசல்களுக்கும் பஞ்சமில்லை. குறிப்பாக, சைவ சமயத்தினரும் ஜைனர்களும் மதத் துவேஷத்துடன் காணப்பட்டனர்.

இத்தகைய சூழ்நிலையில்தான் நாதமுனிகளின் முயற்சியால் வைணவ குருபரம்பரை ஏற்பட்டது. ஸ்ரீரங்கம் அதன் தலைமைப் பீடமாக விளங்கியது. ஆளவந்தார் என்கிற யமுனாசாரியார் அப்போதைய வைணவ பீடத்தின் ஆசாரியராக இருந்தார். அவரது முக்கியச் சீடர்களில் ஒருவரான பெரிய திருமலை நம்பியின் சகோதரிக்குப் பிறந்தவர்தான் ராமானுஜர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-என்று உள்ளது. இப்படி அடைப்புக் குறிக்குள் குறிபிடப்பட்டிருக்கும் தகவலே அந்தக் காலகட்டத்தை நமக்கு உணர்த்துவதாகவும் அமைந்துள்ளது.

இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள, கல்கி வார இதழின் நிர்வாக ஆசிரிய ஆர்.வெங்கடேஷ் குறிப்பிட்டுள்ள ஒரு விஷயத்தைப் பார்ப்போம்:
மற்றவர்களுடைய பார்வைகளைப் போலவே, ஸ்ரீதரனுக்கு உள்ள பார்வை இது. இதுதான் எக்காலத்துக்கும் பொருத்தமுடையது என்று எவராலும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. ராமாநுஜரது செயல்களுக்கு இத்தகைய விளக்கங்களும் சாத்தியமே என்ற நோக்கில் இருந்தும் இந்நூலைப் புரிந்து கொள்ளலாம்.

ஆனால், என்னை மகிழ்ச்சிகொள்ள வைக்கும் விஷயம் ஒன்று உண்டு. ஸ்ரீதரன் போலவே, எண்ணற்ற பார்வை, நோக்கம், கோணம் உடைய அனைவருக்கும் இடமளிக்கும் பெருமகனார் உடையவர் என்பதுதான்.
- என்று மிகச் சரியாக குறிப்பிட்டுள்ளார்.

‘காரேய் கருணை இராமாநுஜா!’ ராமாநுஜரின் ஆயிரமாவது ஆண்டில் ராமாநுஜரை, அவரது கருத்துகளை இன்னும் பரவலாக மக்களிடம் கொண்டுசேர்க்க, ராமாநுஜரை எப்படி அனைவருக்குமானவராக எடுத்துச் செல்வது என்ற வகையில், ராமாநுஜரை எந்தப் பார்வைகொண்டு பார்க்க வேண்டும் என்பதற்கு ஒரு வழிகாட்டியாக அமைந்துள்ளது.

நூலின் பெயர்: காரேய் கருணை இராமாநுஜா!
ஆசிரியர்: வேதா டி. ஸ்ரீதரன்
பக்கங்கள்: 174; விலை: ரூ. 150.00

வெளியீடு:  
வேத ப்ரகாசனம், 
64, மதுரை சாமி மடம் தெரு,
(செம்பியம் தீயணைப்பு நிலையம் எதிரில்)
பெரம்பூர், சென்னை – 600 011. 
தொ.பே:  99405 52516, 80152 52859, 72002 56789.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக