புதன், 3 ஆகஸ்ட், 2016

மதிப்பைத் தரும் வைணவச் சின்னம்

-ஆசிரியர் குழுவைணவர்களின் முக்கியமான அடையாளம், அவரகளின் திருமண் சார்த்துதல். பஞ்ச சம்ஸ்காரங்களில் இரண்டாவது கடமை இது.

திருமண்ணின் வெண்மையான பகுதி (நாமக்கட்டி)  பகவானின் பாதங்களைக் குறிக்கும். நடுவில் இடப்படும் ஸ்ரீசூர்ணம் (குங்குமம்), லட்சுமியைக் குறிக்கும். 
 

நெற்றி, நடு வயிறு, மார்பு, கழுத்து, வலதுபுற வயிறு, வலது தோள், வலக்கழுத்து, இடதுபுற வயிறு, இடது தோள், இடது புறக் கழுத்து, முதுகுத்தண்டுக்கு அடியில், பிடரி ஆகிய 12 இடங்களில் திருமண்  சார்த்துதல் வேண்டும்.

திருமண் அணியும்போது, கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்கிரமன், வாமனன், ஸ்ரீதரன், ரிஷிகேசன், பத்மநாபன், தாமோதரன் ஆகிய பெருமாளின் பன்னிரு நாமங்களை (துவாதச நாமங்கள்) தியானித்து திருமண் காப்பிட வேண்டும்.

முழு விவரங்களுக்கு காண்க: ஸ்ரீ வைஷ்ணவம்- என்சைக்ளோபீடியா ( கிழக்கு பதிப்பகம்) - ஆசிரியர்: வேணு சீனிவாசன்.


.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக