புதன், 24 ஆகஸ்ட், 2016

யதிராஜர் இயற்றிய ஏற்றமிகு இலக்கியங்கள்

-ஆர்.மைதிலிபிரபஞ்சத்தில் அவ்வப்போது ஆன்மிக ஜோதிஸ்வரூபங்கள் வெளிக் கிளம்புகின்றன. இப்படி ஒரு நிகழ்வாகவே,  கி.பி.1017 பிங்கள ஆண்டு சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரம் பொருந்திய வியாழக்கிமையன்று, பூதபுரி என்னும் ஸ்ரீ பெரும்புதூரில் கேசவ சோமயாஜி பட்டாச்சார்யருக்கும் காந்திமதி எனும் பூமிப் பிராட்டியாருக்கும் மனித குல வரலாற்றில் வியப்பூட்டும் ஒரு தத்துவ மேதையாகவும் சமூகப் புரட்சியாளாராகவும் மனித பண்புகளுக்கு ஒரு களஞ்சியமாகவும் ஸ்ரீ ராமானுஜர் தோன்றினார். அவர் இயற்றியதில் முதன்மையானது ஸ்ரீபாஷ்யம்.

ஸ்ரீ பாஷ்யம் என்ற நூல் எழுதப்பட்ட வரலாறு:

 •  வடமொழியில் ராமானுஜர் இயற்றியஸ்ரீ பாஷ்யம்என்ற நூல் அவருடைய தலைசிறந்த படைப்பாகும். வேதாந்தத்தில் விசிஷ்டாத்வைத தத்துவத்தை காலத்திற்கும் நிலைநாட்டிய நூல்.
 • காஷ்மீர்தேசத்தில்தான்ஸ்ரீபாஷ்யம்நூலுக்கானபோதாயனசூத்திரவிருத்தியுரைநூல்இருந்தது.
 •  ராமானுஜர் தன் சீடர் கூரத்தாழ்வாருடன் காஷ்மீர் பயணம் மேற்கொண்டார்.
 •  காஷ்மீரில் பண்டிதர்களைச் சந்தித்து வேத வேதாந்த விஷயங்களை கலந்துரையாடினார்.
 •  பண்டிதர்கள்போதாயன விருத்தி நூலைஇராமானுஜருக்கு கொடுக்கக்கூடாது என்று முடிவு செதனர்.
 •  அதனால் ராமானுஜர் கடைசியாக காஷ்மீரத்து மன்னரிடம் சென்று கேட்டார்.
 •  ராமானுஜரது முகவசீகரமும் காந்த சக்தியும் அரசனை கவர்ந்துபோதாயன விருத்தி நூலைநீங்கள் உங்கள் நாட்டுக்கே எடுத்துச் செல்லலாம் என்று அனுமதி அளித்து, நூலையும் கொடுத்தனுப்பினார்.
 •  ஆனால் அந்த நாட்டுப் பண்டிதர்கள் ராமானுஜரைப் பின்தொடர்ந்து வந்து நூலை திருடிக்கொண்டு போய் விட்டனர்.
 •  ஆனால் அவருடைய சீடர் கூரத்தாழ்வார் அதிலுள்ள பொருட்கள் அனைத்தையும், அந்த நூல் முழுவதையும் படித்து விட்டார்.
 •  ராமானுஜர் கூரத்தாழ்வாரின் கல்வி நினைவாற்றல் கண்டு மெய்சிலிர்த்தார்.
 •  ஸ்ரீ ராமானுஜர் கூற கூரத்தாழ்வார்ஸ்ரீ பாஷ்யம்என்ற நூலை எழுதி முடித்தார்.
 •  ஸ்ரீ ராமானுஜர் இயற்றியஸ்ரீ பாஷ்யம்என்ற நூல் ஸ்ரீ வைஷ்ணவ விசிஷ்டாத்வைத கொள்கைக்கு ஆதார நூல்.
 •  பக்தி சரணாகதியை ஆதாரமாகக் கொண்ட சேவையை மையமாகக் கொண்டது தான் விசிஷ்டாத்வைதம். விஞ்ஞான பொக்கிஷமாக, குறையாத ஞான சமுத்திரமாய், இறைவனின் அருகாமையை உணர்த்தும் நூலாக அமைந்தது  ஸ்ரீ பாஷ்யம்’.
ராமானுஜர் எழுதிய பிற இலக்கியங்கள்:

1. வேதார்த்த ஸ்ங்கிரகம்:
இதில் முரண்படுவது போலத்தோன்றும் சுருதி வாக்கியங்களை இசைத்துக்காட்டும் விசிஷ்டாத்வைத சாரமான கொள்கைகளைக் காணலாம்.


2. வேதாந்த தீபம், வேதாந்த சாரம்:
வேதாந்த தீபம், வேதாந்த சாரம் என்பவை பிரம்ம சூத்திரங்கள் என்ற வேதாந்த சூத்திரங்களுக்கு சுருக்கமான உரை. ஸ்ரீ பாஷ்யம்" விரிவாக கூறுவதை இது சுருங்கக் கூறி விளங்க வைக்கிறது எனலாம்.

3. கீதா பாஷ்யம்:
சங்கரரைப் போல பகவத்கீதைக்கும் ஒரு பாஷ்யம் எழுதி இருக்கிறார். இதை ராமானுஜரின் கீதா பாஷ்யம் என்கிறோம்.

4. கத்யத்ரயம்:
கத்யத்ரயம் என்பது மூன்று நூல்கள் அடங்கியது. 1. சரணாகதி கத்யம்  2. ஸ்ரீரங்க கத்யம் 3. ஸ்ரீ வைகுந்த கத்யம்
அ. சரணாகதி கத்யம்:
சரணாகதி கத்யம் என்ற நூல் ஆழ்வார்களின் சரணாகதிக் கொள்கையை வெளியிடுகிறது எனலாம்.
ஆ. ஸ்ரீரங்க கத்யம்:
ஸ்ரீ ரங்க கத்யம் என்ற நூலில் சரணாகதி தர்மத்தைப் பற்றி கூறப்பட்டிருக்கிறது. ரங்கநாதப்பெருமானை தன்னை தாசனாக்கிக் கொள்ளும்படி வேண்டுவது.
இ. ஸ்ரீ வைகுந்த கத்யம்:
ஸ்ரீ வைகுந்தகத்யம் என்ற நூலில், ஸ்ரீ வைகுந்தம் என்ற பேரின்ப உலகு குறித்தும் முக்தர்களின் நிலை குறித்தும் கூறப்பட்டிருக்கிறது. மகாவிஷ்ணுவின் இருப்பிடமான வைகுண்டத்தை நேரில் பார்ப்பது போல் விவரிப்பது.

8. நித்திய கிரந்தம்:
நித்திய கிரந்தம் என்ற நூல் பக்தர்களுக்கு அன்றாடம் செய வேண்டிய கடமைகளைக் குறிப்பிட்டு ஒரு வழிகாட்டியாக அமைந்திருக்கிறது. சிறப்பாக பகவானை வழிபடுவதற்கு இது ஒரு வழிகாட்டியாகப் பாகவதர்களுக்கு உதவும்.

ராமானுஜரின்ஸ்ரீ பாஷ்யம்என்ற நூலால் ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்திற்கு விசிஷ்டாத்வைத வேதாந்தக் கோட்டை கிடைத்திருக்கிறது. வடநாட்டிலும் வசிஷ்டாத்வைத தத்துவங்கள் பிரபலமடைந்தன.  


நன்றி:  
விஜயபாரதம் - ஸ்ரீ ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டுவிழா சிறப்பிதழ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக