புதன், 31 ஆகஸ்ட், 2016

இராமானுஜ நூற்றந்தாதி-திருவரங்கத்தமுதனார்ஆச்சார்யர் ஸ்ரீ ராமானுஜரைப் போற்றி மகிழும் ‘இராமானுஜர் நூற்றந்தாதி’யை திருவரங்கத்தமுதனார் இயற்றினார். 108 பாக்கள் உள்ள கலித்துறை அந்தாதி வகை இலக்கியமான இதனை அன்றாடம் வேதத்துக்கு நிகராக ஓத வேண்டும் என்பது நியதி. இதற்கு ‘ப்ரபன்ன காயத்ரி’ என்ற பெயரும் உண்டு. மணவாள மாமுனிகளும் பிள்ளைலோகம் ஜீயரும் இதற்கு விளக்கவுரை எழுதியுள்ளனர்.
தனியன்கள்:முன்னை வினையகல மூங்கிற் குடியமுதன்

பொனங்கழற்கமலப் போதிரண்டும், – என்னுடைய

சென்னிக் கணியாகச் சேர்த்தினேன், தென்புலத்தார்க்கு,

என்னுக் கடவுடையேன் யான்! 1நயந்தரு பேரின்பமெல்லாம் பழுதென்று நண்ணினர்பால்,

சயந்தரு கீர்த்தி இராமானுசமுனி தாளிணைமேல்,

உயர்ந்த குணத்துத் திரவரங்கத்தமுது ஓங்கும், அன்பால்

இயம்பும் கலித்துறை அந்தாதி ஓத இசை நெஞ்சமே!. 2சொல்லின் தொகைகொண்டுஉனதடிப்போதுக்குத் தொண்டுசெய்யும்,

நல்லன்பர் ஏத்துமுன் நாமமெல்லாம் என்தன் நாவினுள்ளே,

அல்லும் பகலும் அமரும்படி நல்கு அறுசமயம்

வெல்லும் பரம, இராமானுச! இதென் விண்ணப்பமே. 3

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

ஒப்பற்ற கருணைக்கடல்

-கா.ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீமதே ராமானுஜாய நம:

- என்று முகப்பிடாமல் எந்த ஸ்ரீவைஷ்ணவரும் கடிதம் எழுதும் வழக்கமில்லை. ஸ்ரீவைஷ்ணவர்கள் ஒருவரை ஒருவர் வணங்கும்போது,  ‘அடியேன் ராமானுஜதாசன்’ என்றே கூறிக்கொள்வது மரபு.

திங்கள், 29 ஆகஸ்ட், 2016

சிறப்புடை ஒருமை

-பத்மன்ஜனநாயகத்திலே எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்தான், அனைவரும் சரிசமம்தான், சமஉரிமைதான். இருப்பினும், நடைமுறையில் சாதாரண மக்களைவிட அரசு அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு சிறப்புத் தகுதியும், கூடுதல் மதிப்பும், சிறப்பு உரிமைகளும் உண்டல்லவா? அதுபோல்தான் வேதாந்தத்தில் பரமாத்மாவும், ஜீவாத்மாக்களும் ஒன்றுதான் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டாலும்கூட, சில சிறப்புத்தன்மைகளால் ஜீவாத்மாக்களை விட பரமாத்மா மேலானது என்று வாதிடும் தத்துவம்தான்  ‘விசிஷ்டாத்வைதம்’.

விசிஷ்டாத்வைதத்தை  ‘விசிஷ்ட அத்வைதம்’ என்று பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும். அத்வைதம் என்றால்  ‘இருமையற்ற ஒருமை’ என்று பொருள். விசிஷ்ட என்றால்  ‘விசேஷத் தன்மை வாய்ந்த, அதாவது சிறப்புத் தன்மையுடன் கூடிய’ என்று பொருள். ஆக, விசிஷ்டாத்வைதம் என்றால்  ‘சிறப்புடை ஒருமை’ என்று கூறலாம்.

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

ஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கை வரலாறு -முகவுரை

-சுவாமி ராமகிருஷ்ணானந்தர்
வங்க நாட்டில் பகவான் ஸ்ரீராமானுஜரைப் பற்றிப் பெரும்பாலும் பலருக்குத் தெரியாது. இதற்குக் காரணம்- ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்களாக, அந்த மகாத்மாவின் கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் இங்கே வெகு சிலரே. ஆனால் தென்னிந்தியாவில் ஸ்ரீவைஷ்ணவர்களின் பெருமை மிகவும் ஓங்கியுள்ளது. ஸ்ரீராமானுஜர் எந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு தமது கோட்பாடுகளை நிறுவினார்? அவர் காலத்துக்கு முன்னமே இந்த நெறி பரவியிருந்ததா? அவரைப் பின்பற்றுபவர்களுக்கு ஏன் ஸ்ரீவைஷ்ணவர்கள் என்று பேர்? சங்கர பகவத்பாதரின் அத்வைத தத்துவத்திற்கும் ராமானுஜரின் தத்துவத்திற்குமிடையே ஒற்றுமைகள் உண்டா? என்ற விஷயங்களைப் பற்றி வங்கநாட்டில் வாழ்பவரும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமே.

சனி, 27 ஆகஸ்ட், 2016

நான் இராமானுசன் – சில கேள்விகள், ஒரு பதில்

-ஆமருவி தேவநாதன்‘நான் இராமானுசன்’ நூல் பற்றிய பல விமர்சனங்கள் வந்துள்ளன. சில கேள்விகளும் வந்துள்ளன. பல கேள்விகள் ஒரே மாதிரியானவை. கடந்த ஒரு மாதமாக இவற்றைத் தொகுத்து இருந்தேன். ஒரே பதிவில் விடை அளிக்கிறேன்.

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

காரேய் கருணை இராமாநுஜா! - வேதா டி.ஸ்ரீதரன்

-என்.டி.என்.பிரபு


 

 

 

 

 

 

.

 

.

 

 

 

 .

காரேய் கருணை இராமாநுஜா!

. 

-வேதா டி. ஸ்ரீதரன்

 வெளியீடு:  வேத ப்ரகாசனம்,  சென்ன
 


வேதா டி. ஸ்ரீதரன் அவர்கள் ‘காரேய் கருணை இராமாநுஜா!’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.  ‘ஏரியல் வியூ’ என்று சொல்வார்களே அப்படி ஒட்டுமொத்தமாகப் பார்த்து, ஒரு பரந்துபட்ட பார்வையுடன் ராமாநுஜரை அணுகியுள்ளார்; பல இடங்களில் நுணுகியும் பார்க்கிறார்.

இராமாநுஜர் குறித்த பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் அலசி ஆராய்ந்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ராமாநுஜரை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதே இப்புத்தகத்தின் மையக் கரு.

வியாழன், 25 ஆகஸ்ட், 2016

பஞ்ச ஸம்ஸ்காரங்கள்


-ஆசிரியர் குழு


.
1. தப ஸம்ஸ்காரம்:  ஹா விஷ்ணுவின் அம்சங்களாக இருக்கும் சங்கு சக்ரத்ததை தன் இரு கைபுஜங்களிலும் தரித்தல்.
 .
2. திருமண்: ஸ்ரீ சூர்ணம் நெற்றியில் இட்டுக்கொண்டு, திருமண் காப்பினை 12 இடங்களில் தரித்தல்.
 .
3. ரஹஸ்யத்ரய மந்த்ரம்: அஷ்டாத்திர மந்திரம், த்வயம் மற்றும் ச்ரம ஸ்லோகத்தினை கற்றுணர்வது.
 .
4. இஜ்ஜை: ஸ்ரீமந் நாராயணனை உரிய வழிபாட்டு முறையோடு பகவத் திருவாராதணம் செய்தல்.
 .
5. பகவத் சிந்தனை: ஆச்சார்யர் அனுக்கரஹத்துடன், தன் பெயருடன் ராமானுஜதாசன் என்ற பெயரையும் இணைத்துக்கொண்டு, சதா சர்வகாலமும் ஸ்ரீமந் நாராயணனுக்கே அடிமையாக இருந்து தொண்டாற்றுவது. எப்போதும் பகவத் ராமானுஜர் பற்றிய சிந்தனையிலேயே இருப்பது.

.

.புதன், 24 ஆகஸ்ட், 2016

யதிராஜர் இயற்றிய ஏற்றமிகு இலக்கியங்கள்

-ஆர்.மைதிலிபிரபஞ்சத்தில் அவ்வப்போது ஆன்மிக ஜோதிஸ்வரூபங்கள் வெளிக் கிளம்புகின்றன. இப்படி ஒரு நிகழ்வாகவே,  கி.பி.1017 பிங்கள ஆண்டு சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரம் பொருந்திய வியாழக்கிமையன்று, பூதபுரி என்னும் ஸ்ரீ பெரும்புதூரில் கேசவ சோமயாஜி பட்டாச்சார்யருக்கும் காந்திமதி எனும் பூமிப் பிராட்டியாருக்கும் மனித குல வரலாற்றில் வியப்பூட்டும் ஒரு தத்துவ மேதையாகவும் சமூகப் புரட்சியாளாராகவும் மனித பண்புகளுக்கு ஒரு களஞ்சியமாகவும் ஸ்ரீ ராமானுஜர் தோன்றினார். அவர் இயற்றியதில் முதன்மையானது ஸ்ரீபாஷ்யம்.

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

காரேய் கருணை ராமானுஜர்
-லாவண்யா ஜெயராம்தேனார் கமலத் திருமாமகள் கொழுநன்

தானே குருவாகித் தன்னருளால் மானிடர்க்காய்

இந்நிலத்தே தோன்றுதலால் யார்க்கும் அவன் தாளிணையை

உன்னுவதே சாலவுறும் 

 -என எம்பெருமானார் சாதித்தருளியபடி காரேய் கருணை ராமானுஜர் அவதரித்து தமது சித்தாந்தத்தை நிலைநாட்டி பூவுலகிலுள்ளவரை வாழ்விக்கச் செய்தார். நூற்றியிருபது ஆண்டுகள் வாழ்ந்து அளப்பரிய ஒப்பந்தக் கைங்கர்யப் பணி செய்த ராமானுஜரைப் பற்றி சீர்திருத்தவாதியா, மறுமலர்ச்சியாளரா, புதுமைகள் படைத்தவரா, புரட்சியாளரா, நெறியாளரா என்ற கேள்விக்கணைகள் தற்பொழுது தோன்றியுள்ளன.  

அம்மகானை எப்படி வகைப்படுத்தினாலும் அவர் செய்த அற்புதத் தொண்டுகள் தொன்றுதொட்டு பின்பற்றி வரப்படுகின்றன. பக்தர் குழாமிற்கு ஆசாரியராகவும் ஆசானாகவும் தத்துவஞானியாகவும் வேதாந்தியாகவும் காணப்படுவதின் காரணம் அவரது நற்பண்புகளாகும். அவற்றுள் முதன்மையாயிருப்பது அன்னாரின் கருணையாகும். அதனை அன்பு, மனிதாபிமானம், சமுதாயப்பற்று, தெய்வபக்தி, சமூக உணர்வு எனப் பலவாறு பெயரிடலாம். இவற்றைக் காட்டும் விதமாக ஒரு சில நிகழ்வுகளைக் கோடிட்டு காட்டும் முயற்சியே இக்கட்டுரை.

திங்கள், 22 ஆகஸ்ட், 2016

வைணவம் தழைக்கச் செய்த ஸ்ரீ ராமானுஜரின் திக்விஜயம்-திருநின்றவூர் ரவிக்குமார்
பாரத நாடே புண்ணிய பூமி. பெரிய மகான்களும் சிறந்த குருமார்களும் இந்த நாட்டை வலம் வந்து வணங்கியதுடன் தங்கள் தத்துவத்தை பாரத மக்களிடையே பரப்புவது வழக்கம். அவ்வாறே ஸ்ரீ ராமானுஜர் மேற்கொண்ட திக்கு விஜயத்தைக் காண்பதன் மூலம் நாமும் இந்த புண்ணிய பூமியை வலம் வருவோம்.

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

அற்புதர் ராமானுஜர்- டி.பி.ராமானுஜம்

-என்.டி.என்.பிரபு

அற்புதர் ராமானுஜர் ஓர் அற்புதமான புத்தகம்!

ராமானுஜர் நாடகம் என்றவுடன் அனைவரும் சொல்வது இந்திரா பார்த்தசாரதி எழுதிய ராமானுஜர் நாடகத்தைத் தான். இப்படி மனதில் பதிந்திருந்த எனக்கு சென்னை கன்னிமாரா நூலகத்தில் நான் கண்ட டி.பி. ராமானுஜம் எழுதிய ‘அற்புதர் ராமானுஜர்’ என்ற நாடகப் புத்தகம் ஆச்சரியத்தை அளித்தது  (புதையலாய் இன்னும் எத்தனை இருக்குமோ?).

ராமானுஜரின் சிறப்புப் பெயர்கள்-எம்என்.ஸ்ரீனிவாசன்
1. இளையாழ்வார்- குழந்தை பிறந்தவுடன் திருத்தகப்பனாரால் இடப்பட்ட திருநாமம்

2. ராமானுஜர்- ஸ்வாமியின் மாமா பெரிய திருமலை நம்பியால் குழந்தைக்கு இடப்பட்ட திருநாமம் (பெரிய நம்பிகளால் பஞ்ச சமஸ்காரம் செய்தருளியபோது, சாற்றப்பட்ட திருநாமம் என்றும் கூறப்படுகிறது.)

3. யதிராஜர்- பெரிய நம்பிகளால், சதுர்த்தாஸ்ரம ஸ்வீகாரத்தின்போது சாற்றப்பட்ட திருநாமம்.

4. உடையவர்- அரங்கன், ராமானுஜருக்கு உபயவிபூதி பட்டம் அளித்து அருளிய திருநாமம்.

5. லக்ஷ்மணமுநி- திருவரங்கப்பெருமாள் அரையர், பெரிய திருமொழி, திருவாய் மொழி (மூலம்) சந்தை செய்தருளி மஞ்சள் காப்பு கைங்கர்யத்திற்கு உள்ளம் மகிழ்ந்து வைத்த திருநாமம்.

6. எம்பெருமானார்- திருக்கோட்டியூர் நம்பியால், ராமானுஜரின் பெரும் கருணை உள்ளத்தைக் கண்டு உகந்து இட்ட திருநாமம்.

7. சடகோபன் பொன்னடி- திருமலையாண்டான் பெரிய திருமொழி, திருவாய்மொழி முதலியவற்றிற்கு அர்த்தங்களை கற்றுத் தந்த பின் அளித்த திருநாமம்.

8. கோயிலண்ணன்- ஆண்டாள் விருப்பப்படி திருமாலிருஞ்சோலை அழகர் உகக்கும்படி,  நூறு தடாவில் வெண்ணையும் நூறு தடாவில் அக்காரவடிசிலும் ஸமர்ப்பித்து, ஸ்ரீ ஆண்டாளால் அருளப்பட்ட திருநாமம்.

9. பாஷ்யகாரர்- சிறந்த ஸ்ரீபாஷ்யம் அருளியதைக் கண்டு காஷ்மீரம்  சாரதாபீடத்திலுள்ள சரஸ்வதி தேவியால் உகந்து சூட்டப்பட்ட திருநாமம்.

10. பூதபுரீச்வரர்- ஸ்ரீ ஆதிகேசவப் பெருமானால் சாற்றியது. (ஸ்ரீபெரும்புதூர்)

11. தேசிகேந்தரர்- திருவேங்கடமுடையானால் சாற்றியது.


குறிப்பு:

ஆதாரம்: சார்ய வைப மஞ்சரி - ஸ்ரீ சுதர்சனம் பதிப்பு  

நன்றி: விஜயபாரதம் - ஸ்ரீ ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டுவிழா சிறப்பிதழ்.