சனி, 30 ஜூலை, 2016

ஆறு விரோதிகள்

-சாண்டில்யன்


பிரபன்னனுக்கு (ஆண்டவனே சரணம் என்றிருப்பவனுக்கு) ஆறு விரோதிகள் உண்டு என்று திருக்கோட்டியூர் நம்பி உடையவருக்கு உபதேசித்தார். 
 
அவை எவை?

அவை: ஆச்ரயண விரோதி, ச்ரவண விரோதி, அனுபவ விரோதி, ஸ்வருப விரோதி, பரத்வ விரோதி, ப்ராப்தி விரோதி.
.
  • ஆச்ரவண விரோதியாவது - அகங்கார மமகாரங்கள், நாம் செய்யும் காரியங்களுக்குப் பலனை எதிர்பார்த்தல், எம்பெருமானுடைய கிருபையை அடைவதில் பிராட்டியினுடைய உதவியை மட்டமாக எண்ணுதல், நமது லஷியம் எது என்பதில் சந்தேகம்.

  • ச்ரவண விரோதியாவது - இதர தெய்வங்களைப் பற்றிய கதைகளைக் கேட்பதில் திருப்தி.

  • அனுபவ விரோதியாவது - பகவானுக்கு அர்ப்பணிக்க வேண்டிய திரவ்யங்களை சுய உபயோகப்படுத்தல்.

  • ஸ்வரு விரோதியாவது - தான் அவனுக்கு அடிமை என்ற எண்ணமில்லாமல் சுதந்திரன் என்ற துர்புத்தி.

  • பரத்வ விரோதியாவது - இதர தெய்வங்களே முதன்மை என்ற எண்ணம்.

  • ப்ராப்தி விரோதியாவது - கேவலரோடு சேர்க்கை.

குறிப்பு:
எழுத்தாளர் அமரர் சாண்டில்யன் எழுதிய ‘மதப்புரட்சி செய்த மகான் ஸ்ரீராமானுஜர்’ என்ற நூலிலிருந்து...


.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக