புதன், 20 ஜூலை, 2016

இன்றும் பொருந்தும் விதிமுறைகள்...

-திருநின்றவூர் ரவிக்குமார்
சுமார் 980 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ ராமானுஜர் திருமலையில் செய்த விதிமுறைகளும் மாற்றங்களும் இன்றும் பொருத்தமாக இருப்பதைக் காணலாம்.

1 . திருமலையில் கைங்கர்யம் உள்ளவர்கள் மட்டுமே அங்கு குடியிருத்தல் வேண்டும்.2. திருமலையில் திருமலையப்பன் திருவமுது செய்த பிரசாதம் தவிர மற்ற உணவுப் பொருட்களை உண்ணலாகாது.

3 . திருமலையில் திருமலையப்பனுக்கு சமர்பிக்கப்பட்ட மலர்களே மற்ற திருமாளிகைகளில் எழுந்தருளியுள்ள மூர்த்திகளுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

4 . திருமலையில் ஈமக்கிரியைகள் செய்யக் கூடாது.

5. திருமலையில் மிருகங்களையோ பறவைகளையோ, கொல்லவோ  உண்ணவோ கூடாது.

6. திருமலையில் ரதவீதிகளிலோ அல்லது விழாக் காலங்களில் திருமலையப்பன் எழுந்தருளும் இடங்களிலோ யாரும் பாதணிகளை அணிவதோ வாகனங்களில் செல்லுவதோ கூடாது.

7. திருமலையப்பன் மேல் நம்பிக்கை அற்றவர்கள் யாரும் திருமலைக்கு வரக் கூடாது.

8. திருமலையில் சுவாமி புஷ்கரிணிக்கும் திருமலை அடிவாரத்தில் உள்ள  ஆழ்வார் தீர்த்ததிற்கும் இடையே வேறு தெய்வங்களுக்குக் கோயில் கட்டக் கூடாது.

சுவாமி புஷ்கரிணியிலிருந்து ஒரு யோஜனை ( 10 மைல் ) தூரம் வரை இந்த நியமனங்களை கடைப்பிடிக்க வேண்டும். .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக