வியாழன், 14 ஜூலை, 2016

ஸ்ரீமத் ராமானுஜ வைபவம் - ஆர்.பொன்னம்மாள்

-ஆசிரியர் குழு

.
.

ஸ்ரீமத் ராமானுஜ வைபவம்

.
ஆசிரியர்: ஆர்.பொன்னம்மாள்
.
வெளியீடு: வானதி பதிப்பகம்

எம்பெருமானார் என்று அகில உலகினராலும் போற்றி வணங்கப்படுபவர் ஸ்ரீமத் ராமானுஜர். அவரது ஆயிரமாவது அவதார தின வைபவம் இந்த ஆண்டு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீமத் ராமானுஜரின் அவதார சரித்திரத்தைப் பற்றிய பல நூல்கள் வெளிவந்துள்ளன என்றாலும், திருமதி ஆர்.பொன்னம்மாள் எழுதியுள்ள  ‘ஸ்ரீமத் இராமானுஜ வைபவம்’  எனும் இந்த அரிய நூல், பல அக்கால தெய்வீக நிகழ்ச்சிகளை அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

இந்நூலில் ஸ்ரீமத் ராமானுஜரின் அவதார ரகசியங்களைப் பற்றியும், அவரது பெருவாழ்வில் நடந்த எண்ணற்ற நிகழ்ச்சிகளையும் வெகு அழகாக நம் கண் முன் நிகழ்வது போன்று எளிமையான நடையில் விவரித்துள்ளார் பொன்னம்மாள் அவர்கள். 

ஸ்ரீ உடையவரின் அவதார காலத்தில் நடந்த நிகழ்ச்சிகள் குறித்த ஐயங்களுக்கான விடைகளையும் இந்நூலில் அழகாக குறிப்பிட்டுள்ளார். போற்றிப் பாதுகாக்க வேண்டிய அருமையான புத்தகம் இது!

வானதி பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள அழகான இந்தப் புத்தகத்தின் விலை: ரூ. 100/- பக்கங்கள்: 172.

கிடைக்குமிடம்:
வானதி பதிப்பகம்,
23, தீனதயாளு தெரு,
தி.நகர்,
சென்னை - 600 017.
தொலைபேசி எண்கள்: 24343810 / 24310769

.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக