ஞாயிறு, 19 ஜூன், 2016

ஸ்ரீ ராமானுஜர் 1000- தி இந்து சிறப்பு மலர்

-ஆசிரியர் குழு
-


தி இந்து

ஸ்ரீ ராமானுஜர் 1000


ஸ்ரீ ராமானுஜரின் 1000-வது பிறந்த தினத்தை ஒட்டி  ‘தி இந்து’ தமிழ் சிறப்பு மலரை வெளியிட்டுள்ளது. இந்தச் சிறப்பு மலரில் ராமானுஜரின் சமத்துவ நோக்கம், தத்துவம், ஆன்மிகச் சிந்தனைகள் எனப் பல பரிமாணங்களையும் விவரிக்கும் அறிஞர்களின் கட்டுரைகளும், கருத்துகளும் படைப்புகளும் விரிவாகவும் ஆழமாகவும் இடம்பெற்றுள்ளன.


அஹோபிலம் ஜீயர் ஆசியுரை, எம்பார் ஜீயர் நேர்காணல் ஆகியவையும், ஸ்ரீ ராமானுஜர் பற்றி காஞ்சி மகா பெரியவர் எழுதியிருக்கும் கருத்துகளில் ராமானுஜரின் வாழ்க்கைச் சித்திரமும் அவர் வாழ்ந்த வாழ்க்கையின் எளிமையும் பெருமையும் நம் முன் தரிசனமாகின்றன.

இந்திரா பார்த்தசாரதி, சாண்டில்யன், திருப்பூர் கிருஷ்ணன், எஸ். கோகுலாச்சாரி, இளங்கண்ணன், மாலோல கண்ணன் உள்ளிட்ட பல படைப்பாளிகளின் ராமானுஜர் குறித்த படைப்புகளும் மலரில் இடம்பெற்றுள்ளன.

தீண்டாமையை எதிர்த்த தீரர், ராமானுஜரின் அமுத மொழிகள், ராமானுஜர் தரிசித்த திருக்கோயில்கள் எனப் பல தலைப்புகளிலும் ராமானுஜரின் வாழ்வின் முக்கிய தருணங்கள் பதிவாகி இருக்கின்றன.

மகான் ஸ்ரீ ராமானுஜர் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பூமியில் பாய்ச்சிய ஆன்மிக வெளிச்சம், அவரின் இந்தச் சிறப்பு மலரில் ஒளிப் பக்கங்களாக விரிந்திருக்கின்றன.

ஒருவன் படும் துயரைக் கண்டு மனம் இரங்குபவனே உண்மையான வைஷ்ணவன் என்று முழங்கிய அவரின் மனித நேயக் குரல், மலரின் பக்கங்கள்தோறும் எதிரொலிக்கின்றன.

விலை: ரூ. 90.00 

மேலும் விவரங்களுக்கு: தி இந்து இணையதளம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக