வியாழன், 30 ஜூன், 2016

ராமானுஜர்- இந்திரா பார்த்தசாரதி

– விஜயஸ்ரீ சிந்தாமணி

ராமானுஜர்

-இந்திரா பார்த்தசாரதி
பதிப்பாண்டு: 2007
வெளியீடு:  வரம் பதிப்பகம், சென்னை
பக்கங்கள் – 104,  விலை: ரூ. 50.00

தமிழ்மொழி வல்லுனரும், ‘பாரதீய பாஷா பரிஷத்’  விருது பெற்ற தலைசிறந்த எழுத்தாளருமான பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய வைஷ்ணவ மதாச்சாரியரான ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்று நூல் இது.

புதன், 29 ஜூன், 2016

Like the rain that drenched everything

-DR PREMA NANDAKUMAR

The Idol of Ramanujar being taken in procession on the ocassion of his Tirunatchathiram as a part of the 1000th year celebration in Sri Ranganathar swamy temple in Srirangam.


Sri Ramanuja’s compassion knew no distinction.

The ideal student of yesterday had now become a sought-after teacher too. One thousand years after, we still speak of the admirable relationship that existed between him and his students. They revered him because of his exemplary character and readiness to work hard to teach them. Sri Ramanuja had written his magnum opus, Sri Bhashya, as a highly erudite commentary on the Brahma Sutras. And though there were brilliances like Kuresa, Dasarathi, Parasara Bhatta and Govinda, the teacher must have noticed that there are always rising tiers in the capacity of young minds to understand the technicalities of a subject. This is why he wrote other commentaries on the Brahma Sutras like Vedanta Sara and Vedanta Deepa for different grades. And all his commentaries have an intensely human angle coming through legends and similes from everyday experience. This way, none of his disciples felt left out. Perhaps a lesson for those teachers of today, who are not prepared to go the extra mile for the sake of a student or see another point of view!

செவ்வாய், 28 ஜூன், 2016

யுக புருஷர் ஸ்ரீ இராமானுஜர் -3

-கே.ஆர்.ஸ்ரீநிவாச ராகவன்  குருவே  சீடனைப்  போற்றிய  அற்புதம்

 திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் திருமந்திரம் உபதேசம் பெற பதினெட்டு முறை நடந்தும், பட்டினியால் இளைத்தும் நலிந்த ராமானுஜருக்கு பத்தொன்பதாவது முறை தான் திருமந்திரம் உபதேசம் செய்தார் திருக்கோஷ்டியூர் நம்பி. 
 “தகுதியற்றோர்க்கு இந்த மந்திரத்தை உபதேசிக்கக் கூடாது” என்றும் நிபந்தனையும் இட்டார். “மீறினால் நரகம் சம்பவிக்கும்’ என்றும் சொன்னார்.

திங்கள், 27 ஜூன், 2016

The acharya non-pareil

- DR. PREMA NANDAKUMARThe Ubhaya Vedanta movement initiated by Sri Nathamuni reached its noon-time glory when Sri Ramanuja became the head of the community and the administrator of the Srirangam temple.

ஞாயிறு, 26 ஜூன், 2016

பகவான் ராமானுஜரின் காலடிச் சுவட்டில் சுவாமி விவேகானந்தர்

-முனைவர் இரா.இளங்கோ

 

தாழ்த்தப்பட்டவர்கள் உயர வேண்டும்; ஆனால் ஆன்மிகத்தை அழித்தல்ல.

ஆன்மிகம் என்பது அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் - இவற்றை மனதினின்று துப்புரவாகத் துடைத்து விடுவது.

ஆன்மிகம் என்பது தன்னை நல்வழிப்படுத்துவது.

ஆன்மிகம் என்பது சுயநலமின்மை.

ஆன்மிகம் என்பது மனிதனில் தெய்வத்தை காண்பது.

ஆன்மிகம் என்பது மனிதனுக்கு சேவை செய்வது;  அதுவே உண்மையான தெய்வ சேவை.

-இதுவே ராமானுஜ- விவேகானந்த தத்துவ அஸ்திவாரம்.

 “ஏழையின் துயரைக்கண்டு எவனுடைய கண்களில் கண்ணீர் கசிகின்றதோ, அவனே உண்மையான வைணவன்” 
-  இது ராமானுஜர்.

சனி, 25 ஜூன், 2016

பெருமாளைத் தமிழில் வாழ்த்திய பெண்கள்

-ஸ்ரீ விஷ்ணு


ஸ்ரீராமானுஜரின் சீடர்களும், அவரைப் பின்பற்றுபவர்களும் தங்களை  ‘அடியேன் ஸ்ரீராமானுஜ தாசன்'’ என்று சொல்லிக்கொள்வதில் பெருமை கொண்டவர்கள். இவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது, வணக்கம், நமஸ்காரம் போன்றவற்றைக் கூறாமல் தாம் இன்னாருக்கு தாசர் என்றே சொல்லி மகிழ்வர்.

வெள்ளி, 24 ஜூன், 2016

Sri Ramanuja: The great integrator

-DR PREMA NANDAKUMAR


Sri Ramanujar at Sri Aadhikesaperumal and Bashyakarar Temple, SriperumbudurWhat makes Sri Ramanuja relevant today? Dr. Prema Nandakumar wites on the saint-philospher in the context of his 1000 birth anniversary.

One thousand years have gone by. Ten centuries. In India alone, so many kingdoms which would do their best to put an end to the religious and cultural traditions that had flourished from time immemorial. The Delhi Sultanate, the five Sultanates of the South - Berar, Bidar, Golkonda, Bijapur and Ahmednagar. Sher Shah and the Suri interregnum. The Moghuls. The British Empire. In spite of all that, Vedic culture not only survived but also gained new spaces. For, the adherents of the culture have had the benefit of leadership by spiritual personalities from time to time, re-formatting the culture in a positive manner without losing any of its seminal strengths. Of such great men, Sri Ramanuja, who was born in the 11 century, takes the pride of place as he remains relevant even today.

வியாழன், 23 ஜூன், 2016

நமக்கெலாம் காப்பு!-கவிஞர் குழலேந்தி
திருப்பெரும்புதூரில் அவதரித்த
திருமாலின் இளையவன்.
திருக்கச்சியுறை வரதராசனின்
ஆணைவழி நடந்த அடியவன்.
திருவரங்கம் கோயில் புதுமை செய்த
கைங்கர்ய வல்லுநன்.
திருவேங்கடத்தைப் பேரரசாக்கிய
திண்மை மிக்க வானவன். 1

புதன், 22 ஜூன், 2016

அனைவரும் நம்மவரே!

-சுரேஷ் ஜோஷிஒப்பற்ற தத்துவம் தந்தவர், அதேசமயம் இன்றும் சமுதாய மாற்றத்திற்கான அரும்பணியில் நமக்கெல்லாம் ஊக்கம் தருபவர் – ஸ்ரீ ராமானுஜர் பிறந்த ஆயிரமாவது ஆண்டு தொடங்குகிற இந்த வேளையில், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் அவருடைய நினைவை பரிபூரணமாக போற்றி அவருக்கு வணக்கங்களை சமர்ப்பித்துக் கொள்கிறது.

செவ்வாய், 21 ஜூன், 2016

யுக புருஷர் ஸ்ரீ இராமானுஜர் -2

-கே.ஆர்.ஸ்ரீநிவாச ராகவன்சிஷ்ய  பாவம்  காட்டி  ஆனந்தப்பட்டான்  திருக்குறுங்குடி  நம்பி  என்றால்,   “அண்ணா” என்றழைத்துக்  குதூகலம்  கொண்டாள்  ஆண்டாள்  நாச்சியார்.

என்ன  காரணம்?

திங்கள், 20 ஜூன், 2016

யுக புருஷர் ஸ்ரீ இராமானுஜர் -1

-கே.ஆர்.ஸ்ரீநிவாச ராகவன்ராமானுஜர்   என்பது  வெறும் சொல் அல்ல; திருமேனி  கொண்டு உலவிய  ஒருவரைக்  குறிக்கின்ற  வார்த்தை  அல்ல;  அந்தச்  சொல்லே  ஓர்  இயக்கம்; தொண்டு!  120 ஆண்டுகள்  எந்த திசையெங்கும்  உலவிப்  பதிந்தன அந்தத்  திருப்பாதங்கள்.

ஞாயிறு, 19 ஜூன், 2016

ஸ்ரீ ராமானுஜர் 1000- தி இந்து சிறப்பு மலர்

-ஆசிரியர் குழு
-


தி இந்து

ஸ்ரீ ராமானுஜர் 1000


ஸ்ரீ ராமானுஜரின் 1000-வது பிறந்த தினத்தை ஒட்டி  ‘தி இந்து’ தமிழ் சிறப்பு மலரை வெளியிட்டுள்ளது. இந்தச் சிறப்பு மலரில் ராமானுஜரின் சமத்துவ நோக்கம், தத்துவம், ஆன்மிகச் சிந்தனைகள் எனப் பல பரிமாணங்களையும் விவரிக்கும் அறிஞர்களின் கட்டுரைகளும், கருத்துகளும் படைப்புகளும் விரிவாகவும் ஆழமாகவும் இடம்பெற்றுள்ளன.

சனி, 18 ஜூன், 2016

உடையவரின் ஆராதனைப் பெருமாள்

-ம.கொ.சி.இராஜேந்திரன்


ஸ்ரீரங்கம் கோயிலில் உடையவர் சன்னிதி

 காஞ்சிபுரத்தில் எழுந்தருளியிருக்கும்  வரதராஜப் பெருமாள்தான்  ஸ்ரீ ராமானுஜரின்  திருவாராதனைப் பெருமாள்  என்பதை  நாம் அறிவோம். ஆனால்,  அந்தப் பெருமாள்  எழுந்தருளப்  பண்ணப்பட்டுள்ள  திருவாராதனைப்  பெட்டி   ஸ்ரீரங்கம்   உடையவர்  சன்னிதியில்  உள்ள அவரது  தாமேயான  திருமேனிக்கு  அருகே வைக்கப்பட்டுள்ளது  என்பது  நமக்கு  தெரியுமா?

வெள்ளி, 17 ஜூன், 2016

ஜாதி வேலிகளை உடைத்த ராமானுஜர்

-வெங்கட் சாமிநாதன்
பதினொன்று,  பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் நீண்ட காலம் வாழ்ந்த இராமானுஜாச்சாரியாரின் முயற்சியில்தான் மிகப் பெரும் எண்ணிக்கையில் தாழ்த்தப்பட்ட மக்களையும் சேர்த்து எல்லா சாதி மக்களும் வைஷ்ணவர்களாக மாற்றப்பட்டு அவர்களிடையே முன்னர் இருந்த சாதி வேறுபாடுகள் களையப்பட்டு சம அந்தஸ்து பெற்றவராயினர்.

வியாழன், 16 ஜூன், 2016

என்ன செய்தார் ராமானுஜர்?


-எல்.ஸ்ரீதரன் 

என்ன செய்தார் ராமானுஜர்? இதோ பதில்கள்...

1. ஆலய நிர்வாகத்தில் பெண்கள்...

1000 வருடங்களுக்கு முன்பே பெண்களை ஆலய நிர்வாகத்தில் ஈடுபடுத்தி, சமூகமே அறியும் வண்ணம், பெண்களுக்குப் பல சமயப் பொறுப்புக்கள் கொடுத்தவர் ராமானுஜர்.

புதன், 15 ஜூன், 2016

ஆச்சாரியர் ராமானுஜரின் நியமனமும், அடிமைப் பணி செய்த முதலியாண்டானும்.....


-நம்பி நாராயணன்ஸ்ரீராமானுஜருடைய ஆச்சாரியர் பெரியநம்பி. பெரியநம்பிக்கு அத்துழாய் என்று ஒரு மகள் இருந்தாள். அத்துழாய்க்கு விமரிசையாக திருமணம் நடந்தது. அவளுக்கு பெரியநம்பி புத்திமதிகள் சொல்லி,புக்ககம்
(புகுந்தவீடு) அனுப்பி வைத்தார்.இனி மாமனாரையும், மாமியாரையும் தான்,தாய் தந்தையாக நினைக்க வேண்டும் என்று அவளுக்கு எடுத்து சொல்லி,அங்கே நன்கு பழகி,சகலரையும் கவரும் வண்ணம் , சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்.

அத்துழாய் கெட்டிக்கார பெண். புக்ககத்தில் எல்லோரோடும் பரிவோடும், பிரியத்தோடும் நடந்து கொண்டாள். ஆனால், அத்துழாய் மாமியாருக்கு அவளின் மீது அதிக பிடிப்பில்லை. பெரியநம்பி ஸ்ரீரங்கத்தில் ஒரு மதிப்பான ஆள் என்பதால் எல்லோரும் திருமணத்திற்கு தலையாட்டி விட்டார்களே தவிர,பெரியநம்பி செய்த சீரை விட,அதிகம் சீர் செய்து, இன்னும் அழகியான பெண்ணை தன் மகனுக்கு மணமுடித்திருக்கலாம் என்ற குறை அவளுக்கு இருந்தது. சீர் போதவில்லை என்று சொல்வதற்கும் பயமாக இருந்தது. எனவே, நேரிடையாக சொல்லாமல் அத்துழாய் மீது சிடுசிடுப்பாக இருந்தாள்.

செவ்வாய், 14 ஜூன், 2016

திருக்கோட்டியூர் நம்பி உடையவருக்கு அருளிய 18 வார்த்தைகள்

 -ஆசிரியர் குழு

ஸ்ரீமதே இராமாநுஜாய நம:


திருக்கோட்டியூர் நம்பி உடையவருக்கு அருளிய 18 வார்த்தைகள்:

1. மோக்ஷத்தில் ஆசை உடைய ஜீவன், வாழ்க்கையில் ஆசையை துறக்க வேண்டும்.

2. வாழ்க்கையில் ஆசையை துறந்தால், அஹங்காரம் மமகாரம் நீங்கும்.


திங்கள், 13 ஜூன், 2016

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து காட்டிய வாழ்க்கை

-ம.கொ.சி.இராஜேந்திரன்


திருப்புல்லாணி கோயிலில் ராமானுஜர் உற்சவர்.

 ஸ்ரீரங்கத்தில்  ஸ்ரீ இராமானுஜர் உஞ்சவிருத்தி (பிக்ஷை ) எடுத்து தன் பசியை ஆற்றுவது வழக்கம். ஒருமுறை அவ்வாறு உஞ்சவிருத்தி எடுத்துவரும்போது அவரை எதிர்த்தவர்களின் திட்டப்படி விஷம் கலந்த சாதத்தை ஒரு பெண்மணி இட்டார். இறைவன் அருளால் அதை அவர் உண்ணவில்லை. இந்தச் சம்பவத்தை ஸ்ரீ இராமானுஜரின் வாழ்க்கையில் நாம் காணலாம். இச்சம்பவத்தால் சில பொருள்பொதிந்த உண்மைகளையும் நம்மால் உணர முடியும்.

ஞாயிறு, 12 ஜூன், 2016

Reforms sans confrontation

-DR PREMA NANDAKUMAR

He showed by example what was to be done to enable society to live together in amity.

Religion calls for a personal god; it suggests rituals; it imposes a discipline. As Sri Aurobindo pointed out, religious discipline is like the scaffolding when building a temple. Only when man has built the “temple of the spirit” can he dispense with the scaffolding made up of worship, image, symbols and the rest. Even then, himself free in the vast expanse of spirituality, the lover of mankind continues to subject himself to religious discipline to show the others the way. Has not Krishna said this to Arjuna in the Gita, explaining his continuous involvement with karma yoga?

Udayavar’s management principles


-DR PREMA NANDAKUMARIt was Sri Ramanuja who laid out plans for carrying out temple rituals at Srirangam, Tirumala and Melkote.

Worshipping in temples and with flowers seem to be a singular gift from South India to the Vedic culture. The famous litterateur Suniti Kumar Chatterjee in the Cultural Heritage of India writes that there is a considerable Dravidian component in today’s temple worship. According to him, “The word puja and the ritual it denotes are both peculiar to India. They are not found among the kinsmen of the Indian Aryans outside India.” He believes that the Dravidian or non-Aryan ritual of puja can be related to a more intimate kinship with the Divine than can be suggested through the Aryan homam; especially the fact that while the homam is largely one of the ‘take and give in return’ one, in puja there is an attendant spirit of “abandon through devotion.” At some later date, the two seem to have been combined.

சனி, 11 ஜூன், 2016

குலம் தாழ்த்தி உயர்த்திச் சொல்லல் பாவம்

-என்.ராஜேஸ்வரிஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தீண்டாமையைச் சாடியவர் ராமானுஜர். தீண்டாமை கூடாது என்பதைத் தமது செய்கையின் மூலம் நிகழ்த்திக் காட்டியவர் அவர். உறங்காவில்லி என்ற அரசாங்க ஊழியனின் கதை அதை நன்கு உணர்த்தக்கூடியது.

மனைவிக்குக் குடை பிடித்தவன்

ஸ்ரீரங்கம் அழகிய நகரம். அங்கு வாழ்ந்து வந்தவன் பிள்ளை உறங்காவில்லி என்ற அரசாங்க ஊழியன். உறங்காமல் வில் பிடித்து காவல் காக்க க்கூடியவன் என்பதால் உறங்காவில்லி என்ற பெயர் பெற்றவன். அவனுக்குத் திருமணம் ஆனது.

வெள்ளி, 10 ஜூன், 2016

ராமானுஜ காவியம் - கவிஞர் வாலி

 -சத்யநாராயணன்ராமானுஜ காவியம்
ஆசிரியர் : கவிஞர் வாலி
பதிப்பகம் : வானதி
பக்கங்கள்: 394
விலை : 150
....விசிஷ்டாத்வைதத்தை தேசம் முழுதும் பரப்பிய இராமானுஜரின் வரலாறான இந்த புத்தகத்தில், இராமானுஜரின் திருஅவதாரம் முதல், அவரது பாரத திக்விஜயம், படைப்புகள், சீடர்கள் ஆகிய அனைத்தையும்/அனைவரையும் பற்றி கவிஞர் வாலியின் கவிதை வரிகளில் அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. பல இடங்களில் தத்துவ விசாரணைகள், எதுகை மோனையுடன், அழகிய சந்தத்துடன் அற்புதமான தமிழில் இருப்பதை படிக்கப் படிக்க இன்பம். சில விவரணைகளை கடக்கும்போது கண்களில் நீர் மல்குகிறது; மனமோ பேரானந்தத்தில் திளைக்கிறது.

காஞ்சிபுரம், உறையூர், திருவரங்கம், திருப்பெரும்புதூர், திருப்புட்குழி, திருக்கச்சி என்று பற்பல தலங்களின் அருமைகளையும்; அவற்றில் எழுந்தருளியிருக்கும் இறைவன்/இறைவியின் பெருமைகளையும் விரிவாகவும், மிகவும் அழகாகவும் விவரித்துள்ளார் கவிஞர். திருவரங்கத்தைப் பற்றி சில பக்கங்கள்; திருப்பெதும்புதூரைப் பற்றிய அழகிய வரலாறு இப்படி கொஞ்சுதமிழில் விவரிக்கும் கவிஞர், இராமானுஜரின் வரலாற்றில் முதல் இடத்தைப் பிடித்த, என் மனம் கவர்ந்த திருவல்லிக்கேணி பார்த்தசாரதியின் பெருமைகளை சொல்லியுள்ளார். அதை படிக்கையிலேயே உணர்ச்சிவசப்பட்டு உடனடியாக சென்று அந்த வெண்மீசை உடையோனை பார்த்து வந்தேன். இதோ அந்த வரிகள்:

வியாழன், 9 ஜூன், 2016

Swami Vivekananda in the foot-steps of Bhagwan Ramanuja


-DR. R.ILANGO  “Elevation of the masses without injuring their religion”-this was the unique way of Swami Vivekananda to uplift the down-trodden.

And this was marvelously in tune with the spirit of Ramanuja in dealing with the oppressed community whom he affectionately called as “Thirukulathars.”


The society was in limbo ever since Ramanuja breathed spirituality in the oppressed and ordinary. 


There was nobody to grasp the spiritual baton from Ramanuja though many appeared after him in the national scenario of Social Reformers.


Such reformers held religion accountable for the pitiable plight of the down-trodden, not knowing the real culprit-“priest craft”.


In their zeal to crush caste system, they ignorantly pulled down the grand structure of religion too, but all their attempts miserably failed.


“…beginning from Buddha down to Ram Mohan Roy…” all held caste as a religious institution while all the time caste was a “…crystallized social institution…”  Vivekananda affirmed.


It was Vivekananda who took the cue from him after a gap of nine centuries and rejuvenated the ideas of Ramanuja injecting fresh blood. 

புதன், 8 ஜூன், 2016

இராமானுஜர் பங்கேற்ற அரங்க நிகழ்வுகள் - வரலாறா? கற்பனையா?

-எஸ்.இராமச்சந்திரன் 

விசிஷ்டாத்வைதத் தத்துவத்தை நிறுவிய இராமானுஜர், வைணவ சமயத்தில் பன்னிரு ஆழ்வார்களையடுத்து மிக உயர்ந்த இடத்தை வகிக்கிறார். வேதம் தமிழ் செய்த சடகோபரான நம்மாழ்வாருக்கு இணையாக இவரைக் கருதுவதுண்டு. கி.பி. 12ஆம் நூற்றாண்டில் இவர் திருவரங்கத்திலுள்ள திருமால் கோயிலை நிர்வகித்து வந்தபோது சைவ சமய வெறியனான, குலோத்துங்கன் என்ற பெயருடைய சோழ அரசன் இவரைத் துன்புறுத்தினான் என்றும், சிதம்பரம் நடராசர் கோயிலிலிருந்த கோவிந்தராசப் பெருமாளின் மூர்த்தத்தைக் கடலில் எறிந்தான் என்றும், இக்கொடுஞ்செயல்களின் விளைவாக இராமானுஜர் மாறுவேடத்தில் மகிஷபுரிப் (மைசூர்) பகுதியிலுள்ள தொண்டனூர் என்ற ஊருக்குத் தப்பிச்சென்று பிட்டிதேவன் அல்லது விஷ்ணுவர்த்தனன் எனப்பட்ட ஹொய்சள அரசனின் அடைக்கலத்தில் 12 ஆண்டுகள் வாழ்ந்தார் என்றும், அவரைத் துன்புறுத்திய சோழன் கிருமிகண்டம் (தொண்டைப் புற்று) நோயினால் துன்புற்று இறந்தான் என்றும், அதன் பின்னர் இராமானுஜர் திருவரங்கத்திற்குத் திரும்பினார் என்றும் வைணவர்கள் நம்புகின்றனர். கருடவாகன பண்டிதர் என்பவரால் இயற்றப்பட்ட திவ்யசூரி சரிதம், பிள்ளை லோகஞ்சீயரின் ராமானுஜார்ய திவ்ய சரிதம், யதிராஜ வைபவம், குருபரம்பரா பிரபாவம், திருவரங்கம் கோயில் வரலாற்றைக் கூறும் கோயிலொழுகு முதலிய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகளே மேற்குறித்த நம்பிக்கைகளுக்கு ஆதாரமாகும். 

இராமானுஜர் சாதி உயர்வு தாழ்வுகளை எதிர்த்தவர் என்பதும் சோழ அரசனின் பகைமைக்குக் காரணம் என்ற கருத்து உண்டு. இராமானுஜரின் முதன்மையான சீடரான கூரத்தாழ்வான் பிராம்மணரல்லாதவர் என்பதையும் இவருடைய மனைவியான கூரத்து ஆண்டாளம்மையார் பிராம்மணப் பெண்மணி என்பதையும் இராமானுஜரின் சமரச நோக்கிற்கு எடுத்துக்காட்டாகச் சொல்வதுண்டு. 1 


இராமானுஜரின் சீர்திருத்த நடவடிக்கைகள் பற்றிய பல செவிவழிச் செய்திகள் மக்களிடையே உலவுகின்றன. வருணக் கலப்பில் தோன்றிய சவர்ண பிராம்மணர்களை - குறிப்பாக மருத்துவம், இசை போன்ற தொழில்களைப் பின்பற்றியவர்களை - முழுமையான உயர் பிரிவு பிராம்மணர்களாக மாற்றியவர் இராமானுஜர் என்ற நம்பிக்கை தென்திருப்பேரை வைணவ பிராம்மணர்களிடையே நிலவுகிறது. 


இராமானுஜருக்கும் சோழ அரசனுக்குமிடையே நிலவிய பகைமை குறித்து ஆராய வேண்டும் என்ற ஆவல் ஏற்படுவதற்கு, அண்மையில் நிகழ்ந்த இரு நிகழ்வுகளே காரணமாக அமைந்தன. அவற்றுள் முதல் நிகழ்வு, பரவலாகப் பேசப்பட்ட,  ‘தசாவதாரம்’  திரைப்படத்தில் இடம் பெற்ற, சிதம்பரம் கோவிந்தராசப் பெருமாள் சிற்பம் கடலில் எறியப்பட்டது தொடர்பான கலையுலகச் சித்திரிப்பு ஆகும். அடுத்த நிகழ்வு, ஆய்வுலகு தொடர்பானது. 


தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநர் முனைவர் இரா. நாகசாமி அவர்களால் எழுதப்பட்டுள்ள Ramanuja - Myth and Reality என்ற நூலில், (பதிப்பு: Tamil Arts Academy, Chennai - 90, 2008)


 “ராமானுஜர் மிகச் சிறந்த ஒரு வேதாந்தியே தவிர, ஒரு சீர்திருத்தவாதி என்பதற்கோ, திருவரங்கம் கோயிலை நிர்வகித்தார் என்பதற்கோ, சோழ அரசனால் துன்புறுத்தப்பட்டார் என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை. இராமானுஜரை, ஒடுக்குமுறைக்கு ஆளான ஒரு புரட்சியாளர் என்று சித்திரிப்பதற்காக வலிந்து மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியே, வைணவர்களால் புனையப்பட்ட இக்கட்டுக்கதைகள்; சொல்லப்போனால் சோழ அரசர்கள் சமயப் பொறை மிக்கவர்கள்; பின்னமாகிப்போன தெய்வச் சிலைகளை நீர்நிலையில் இடுவதென்பது சாஸ்திரபூர்வமான ஒரு நடவடிக்கையே. இரண்டாம் குலோத்துங்கன் சிதம்பரம் நடராசர் கோயிலிலிருந்த கோவிந்தராசப் பெருமாளின் சிதைந்து போன சுதையுருவத்தைக் கடலில் இட்ட செயலை ஒட்டக்கூத்தர் தம்முடைய மூவர் உலாவிலும் தக்கயாகப்பரணியிலும் சற்று மிகைப்படுத்திக் கூறிவிட்டார்; அவ்வளவுதான்.” 


- என்று தீர்மானமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இராமானுஜருக்கும் சோழ அரசனுக்குமிடையில் நிலவிய பகைமை என்பது வெறும் கற்பனையா என்பதை இக்கட்டுரையில் ஆராய முயன்றுள்ளேன். 

செவ்வாய், 7 ஜூன், 2016

புரட்சித் துறவி இராமானுஜர்

- எஸ்.ஆர்.சேகர்

 
ஸ்ரீபெரும்புதூர் தானுந்த திருமேனி


 கட்டுரையின் தலைப்பே வித்யாசமாக இருக்கிறதல்லவா? கட்டுரையின் நாயகனும் வித்தியாசமானவர்தான்.

4.4.1017, இன்றைக்கு 1,000 ஆண்டுகளுக்கு முன், ஸ்ரீபெரும்புதூர் என்னும் தலத்தில் அவதரித்த மகான் இராமானுஜர். ஆசாரமான, கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய பிராமண குடும்பத்தில் பிறந்தார். புத்திர காமேஷ்ஷ யாகம் நடத்திப் பெற்ற அருந்தவப் புதல்வர் இராமானுஜர். பிற்காலத்தில் பிரபலமான ஆங்கில ‘எண் கணித சாஸ்திரப்படி கூட’ இராமானுஜரின் பிறந்த எண்கள் உலகின் குருவாகப் பிறந்தவரின் எண்களாக இருந்தன.

திங்கள், 6 ஜூன், 2016

சமரசம் உலாவும் இடமே...

-பூ.சேஷாத்ரி ராமாநுஜதாஸர்  ‘ரம்பையின் காதல்’ என்ற  திரைப்படத்தில், கவிஞர் மருதகாசி இயற்றிய பாடல் வரிகள்தான்  “சமரசம் உலாவும் இடமே"”  என்ற பாடல். ராமாநுஜரின் 1000-ஆவது ஆண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த நல்லவேளையில், ராமாநுஜரின் வழித்தோன்றல்களான பாகவத பக்த கோஷ்டிகளிடம் இந்த சமரசம் இயற்கையாகவே காணப்படுகிறது.

 சமீபத்தில் பாஜக  மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் உத்தரகண்ட் மாநிலத்தில் தலித் மக்களுடன் கோயிலுக்குள் நுழைய முற்பட்டபோது சில சமூக விரோதிகளால் தாக்கப்பட்டது வேதனையளிக்கிறது. இந்நிலையில் ராமானுஜரால் உத்வேகம் பெற்ற பாகவத கோஷ்டிகளிடம் எந்த ஜாதி வேற்றுமையும் இல்லாமல் இருப்பது குறித்து பெருமைப்பட வேண்டும்.

ஞாயிறு, 5 ஜூன், 2016

ராமானுஜரைக் கவர்ந்த தனுர்தாசர்

-ஆசிரியர் குழு
ராமானுஜரின் சீடர்களின் முக்கியமானவராக இருந்தவர் தனுர்தாசர். அவரது மனைவி ஹேரம்பா. இவர்களின் குருபக்தி, நேர்மை, கபடமற்ற நடத்தை போன்றவை ராமானுஜரை வியக்க வைக்கும் வகையில் இருந்தது. ராமானுஜர் காலையில் காவிரி நதியில் நீராடச் செல்வது வழக்கம். நீராடச் செல்லும்போது பிராமணச் சீடராகிய தாசரதியின் தோளில் கை வைத்த படியே நடந்து செல்வார். நீராடிவிட்டு திரும்பும்போது தனுர்தாசரின் தோள் மீது கை வைத்தபடியே ஆசிரமம் திரும்புவார்.

சனி, 4 ஜூன், 2016

இராமானுசர் சொன்ன ஐந்து கடமைகள்

-என்.டி.என்.பிரபு
 

இராமானுசர் சொன்ன ஐந்து கடமைகள்:

  • ஸ்ரீபாஷ்யத்தைக் கற்று உணர்ந்து, அதை மற்றவருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்.

  • அவ்வாறு முடியாவிட்டால், நாலாயிரத் திவ்வியபிரபந்தத்தைக் கற்றுத் தெளிந்து, மற்றவருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்.

  • அவ்வாறு முடியாவிட்டால், திருமால் கோயில் கொண்டுள்ள திவ்வியதேசம் சென்று,  கோயிலைச் சுத்தம் செய்தல், விளக்கேற்றுதல் போன்ற கைங்கர்யங்களைச் செய்ய வேண்டும்.

  • அவ்வாறு முடியாவிட்டால், த்வய மந்திரத்தை அநுசந்திக்க வேண்டும்.

  • அவ்வாறு முடியாவிட்டால் , எம்பெருமான் அடியாரைப் பற்றிக்கொண்டு அவருக்குத் தன்னால் முடிந்த தொண்டு புரிய வேண்டும்.


வெள்ளி, 3 ஜூன், 2016

வடுகநம்பியின் குருபக்தி

-திருநின்றவூர் ரவிக்குமார்


வடுகநம்பி

ராமானுசர் அவதரித்து 30 ஆண்டுகள் கழித்து (1047-ல்  சித்திரை அஸ்வினி ) பிறந்தவர் 'வடுகநம்பி' என்ற மகான்.

ராமானுசரின் அந்தரங்க சீடர்களில் முக்கியமானவர். ராமானுசருக்கு பால் காய்ச்சிக் கொடுக்கும் பணியை விருப்புடன் செய்து வந்தார்.

' தேவு மற்றறியேன்' என்ற மதுரகவியின் வாக்கிற்கிணங்க ராமானுசரை தவிர வேறு யாரையும் மனதாலும் நினையாதவர்.

திருவரங்க மடத்தில் ஒரு நாள் இவர் ராமானுசருக்கு பக்குவமாய் பால் காய்ச்சிக் கொண்டிந்தார். அப்போது நம்பெருமாள் ஊர்வலம் மடத்தருகே வந்தது. ராமானுசர்,   ‘வடுகா! பெருமாளை சேவிக்க வாரும்!’  என அழைத்தார். இவரோ,  ‘உங்கள் பெருமாளை சேவிக்க வந்தால் எங்கள் பெருமாளுக்குப் பால் பொங்கிவிடும்’  என வர மறுத்தவிட்டார்.

ராமானுசர் யாத்திரை செல்லும் போது திவ்ய தேசங்கள் வந்தால் தனது பாதுகைகளை (காலணிகளை) அணிந்து கொள்வதில்லை.
ஒரு முறை திருவெள்ளறை என்ற திருப்பதியை நெருங்கியபோது வழக்கப்படி தமது பாதுகைகளைக் கழற்றிவிட்டு நடந்தார்.

அவற்றை அளவற்ற பக்தியுடன் எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்ட வடுகநம்பி, ராமானுசரின் திருவாராதனப் பெருமாள் வைக்கப்பட்டிருந்த பெட்டியுடன் அதனைச் சேர்த்து ஒரே மூட்டையாகக் கட்டிக்கொண்டு பின்தொடர்ந்தார்.

பின்னர் இச்செய்தியறிந்த ராமானுசர் பதறிப் போய்,  ‘வடுகா! என்ன காரியம் செய்தாய்?’ என சீடரைக் கடிந்து கொள்ள,   ‘தங்கள் தேவரில் எங்கள் தேவர் எந்த விதத்தில் குறைந்தவர்?’ என்று பதிலளித்தார். இவரது குருபக்தி கண்ட உடையவர் பிரமித்தார்.

குருபக்தியில் இணையற்ற வடுகநம்பி 114 சுலோகங்கள் கொண்ட  ‘யதிராஜ வைபவம்’,  28 சுலோகங்கள் கொண்ட ‘ஸ்ரீ ராமானுச அஷ்டோத்திர சதநாம ஸ்தோத்திரம்’,  21 சுலோகங்கள் கொண்ட ‘ஸ்ரீயதிராச மங்களம்’ ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

இவரது பெருமையை,

உன்னையொழிய ஒரு தெய்வம் மற்று அறியா
மன்னு புகழ் சேர் வடுகநம்பி -தன்னிலையை
என் தனக்கு நீ தந்து எதிராசா எந்நாளும்
உன் தனக்கே ஆட்கொள் உகந்து


- என்று புகழ்கிறார் ஆர்த்தி பிரபந்தத்தில் (11)
மணவாள மாமுனிகள்.

குறிப்பு:

திரு. திருநின்றவூர் ரவிக்குமார், எழுத்தாளர். அவரது வாட்ஸ் அப் தளத்திலிருந்து எடுக்கப்பட்ட பகுதி இது.

வியாழன், 2 ஜூன், 2016

குழந்தைகள் கட்டிய கோயில்…

-சக்தி.விண்மணிஉஞ்சவிருத்தி செய்துகொண்டு வைணவப் பெரியார் ஒருவர் தெரு வழியே சென்றுகொண்டிருக்கிறார்.

தெரு ஓரமாக உள்ள ஒரு மரத்தடியில் சில குழந்தைகள் மண்ணால் கோயில் கட்டி விளையாடிக் கொண்டிருந்தனர்.

கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம், முன்மண்டபம், கொடிமரம், சுற்றுச்சுவர் அத்தனையும் மண், சின்னக் கற்கள், குச்சிகள், கோடுகள் ஆகியவற்றால் அமைந்திருப்பதை அந்தப் பெரியவர் பார்க்கிறார்.

கர்ப்பக் கிரகத்துக்குள் ஒரு கல்லை வைத்து மண்ணையே உதிய மர இலைகளின் பிரசாதமாக வைத்து கண்களை மூடி இருகை கூப்பி குழந்தைகள் கும்பிடுவதைப் பார்க்கிறார். மனம் நெகிழ்ச்சியடைகிறது.

புதன், 1 ஜூன், 2016

சமூகப் புரட்சியாளர்

-எஸ்.தோதாத்ரி ஆளவந்தாரின் சீடராகிய இராமானுஜர் மிகப் பெரிய சமூகப் புரட்சியை அக்காலத்தில் செய்துள்ளார்.

வேளாண்மைப் பெருக்கத்தினால் ஏராளமான சாதிகள் தோன்றி, அவற்றிற்குரிய ஒழுக்கமுறைகள் வரையறை செய்யப்பட்டு, இறுக்கம் அதிகமான காலத்தில் இந்த வரையறைகள் மேலிருந்து வந்தவை. ஆனால் கீழ்மட்டத்தில் அதிகமான இல்லை. அது மாறும் கட்டத்திலேயே இருந்தது. அதனால்தான் உற்பத்தி சிறப்படையும் என்ற நிலை சமூகத்தின் அடித்தளத்தில் இடம் பெற்றிருந்தது. இது வெளியில் தெரியாத ஒன்று.